தமிழில்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்
Subhashini.org
  
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 1
அடிமைகளினுள் ஓர் அடிமை

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
34 reads • Oct 2026
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 2
சிறுவயது நாட்கள்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
17 reads • Oct 2026
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 3
கல்விக்கான போராட்டம்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
19 reads • Oct 2026


Write a Review





அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 3
கல்விக்கான போராட்டம்

புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

19 reads • Oct 2026 • 3473 words • 46 rows

 in English   தமிழில்
ஒரு நாள், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ​​வர்ஜீனியாவில் எங்கோ ஒரு இடத்தில் கறுப்பின மக்களுக்கான ஒரு சிறந்த கல்வி நிறுவனம் இருப்பதாக இரு சுரங்கத் தொழிலாளர்கள் பேசிக்கொள்வதைக் கேட்க நேர்ந்தது. எங்கள் ஊரில் இருந்த கறுப்பின மக்களுக்கான சிறிய பள்ளியை விட, மேம்பட்ட ஒரு கல்லூரியைப் பற்றி நான் கேள்விப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
1
அந்த இருள் சூழ்ந்த சுரங்கத்தினுல், பேசிக்கொண்டிருந்த அந்த இரு மனிதர்களுக்கு அருகில், சத்தமின்றி இயன்றவரை நெருங்கிச் சென்றேன். அந்தப் பள்ளியில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் சேரலாம் என்றும், ஏழ்மையிலிருந்தாலும் திறமைமிக்க மாணவர்களுக்கு, அங்கு ஒரு தொழில் அல்லது கைவினைத் துறையைக் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், தாங்கள் தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ உழைப்பின் மூலம் ஈடுகட்டிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் ஒருவர் மற்றவரிடம் கூறுவதைக் கேட்டேன்.
2
அவர்கள் அந்தப் பள்ளியைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தபோது, ​​அதுவே இந்த பூமியில் மிகச் சிறந்த இடமாக எனக்குத் தோன்றியது. அந்த தருணத்தில், வர்ஜீனியாவில் இருந்த 'ஹாம்ப்ட்டன் நார்மல் அண்ட் அக்ரிகல்சுரல் இன்ஸ்டிடியூட்' (Hampton Normal and Agricultural Institute) என்றழைக்கப்படும் அந்தப் பள்ளியை விட, சொர்க்கம் கூட எனக்கு அதிக ஈர்ப்பைத் தரவில்லை. அந்தப் பள்ளி எங்கே இருக்கிறது, எவ்வளவு தொலைவில் உள்ளது, அல்லது அங்கு எப்படிச் செல்வது என்பது குறித்து எனக்கு எந்தத் தெளிவும் இல்லை என்றாலும், எப்படியாவது அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் உடனே தீர்மானித்தேன். 'ஹாம்ப்ட்டன் செல்ல வேண்டும்' என்ற ஒரே லட்சியம் என் மனதை எப்போதும் கொழுந்துவிட்டு எரியச் செய்துகொண்டிருந்தது. இந்த எண்ணம் இரவு பகலாக என்னுடனேயே இருந்தது.
3
ஹாம்ப்ட்டன் கல்லூரி பற்றி கேள்விப்பட்ட பிறகு, நான் இன்னும் சில மாதங்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் தொடர்ந்து வேலை செய்தேன். அங்கு பணிபுரிந்துகொண்டிருந்தபோது, ​​உப்புச் சூளை மற்றும் நிலக்கரிச் சுரங்கத்தின் உரிமையாளரான ஜெனரல் லூயிஸ் ரஃப்னரின் இல்லத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதை அறிந்தேன். ஜெனரல் ரஃப்னரின் மனைவியான திருமதி வயோலா ரஃப்னர், வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தனது பணியாளர்களிடம், குறிப்பாக அவரிடம் வேலை செய்ய வந்த சிறுவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார் என்று அந்தப் பகுதி முழுவதிலும் பெயர் பெற்றிருந்தார். அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்களில் மிகச் சிலரே இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் அங்கு நீடித்தனர்; மற்ற அனைவரும் அவர் மிகவும் கண்டிப்பானவர் என்ற காரணத்தைக் கூறி வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். இருப்பினும், நிலக்கரிச் சுரங்கத்தில் தொடர்ந்து வேலை செய்வதை விட, திருமதி ரஃப்னரின் இல்லத்தில் வேலை செய்து பார்ப்பது மேல் என்று நான் முடிவு செய்தேன். எனவே, எனது தாயார் அந்த வேலைக்காக அவரிடம் விண்ணப்பித்தார். நான் மாதம் 5 டாலர் ஊதியத்திற்கு அந்த வேலையில் அமர்த்தப்பட்டேன்
4
திருமதி ரஃப்னரின் கண்டிப்பைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தேன்; அதனால் அவரைச் சந்திப்பதற்கே எனக்கு ஒருவித அச்சம் இருந்தது, அவர் முன்னிலையில் நின்றபோதெல்லாம் நடுங்கியபடிதான் நிற்பேன். இருப்பினும், அவருடன் சில வாரங்கள் வாழ்ந்த பிறகு, அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் எல்லாவற்றையும் தூய்மையாக வைத்திருக்க விரும்பினார் என்பதையும், காரியங்களைச் சரியான நேரத்தில், திட்டமிட்டபடி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார் என்பதையும் விரைவில் அறிந்துகொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் முழுமையான நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் விரும்பினார். எந்தவொரு விஷயமும் கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ இருக்கக்கூடாது; ஒவ்வொரு கதவும், ஒவ்வொரு வேலியும் எப்போதும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
5
ஹாம்ப்ட்டனுக்குச் செல்வதற்கு முன்பு நான் திருமதி ரஃப்னருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்பது இப்போது நினைவில்லை, ஆனால் அது ஒன்றரை ஆண்டாக இருந்திருக்க வேண்டும். எப்படியிருப்பினும், நான் முன்பே பலமுறை கூறியதை இங்கேயும் மீண்டும் குறிப்பிடுகிறேன்: திருமதி ரஃப்னரின் இல்லத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள், வேறு எங்கும் நான் பெற்ற கல்வியைப் போலவே எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. இன்றும் கூட, வீட்டின் உள்ளேயோ அல்லது தெருவிலோ காகிதத் துண்டுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டால், அவற்றை உடனே எடுத்துவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றும். அசுத்தமான முற்றத்தைக் கண்டால் அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வேலியின் உடைந்த பலகையைக் கண்டால் அதைச் சரிசெய்து பொருத்த வேண்டும் என்றும், வர்ணம் பூசப்படாத அல்லது சுண்ணாம்பு பூசப்படாத வீட்டைப் பார்த்தால் அதற்கு வர்ணம் அல்லது சுண்ணாம்பு பூச வேண்டும் என்றும் எனக்குத் தோன்றும். அதேபோல், ஒருவரின் உடையில் பொத்தான் கழன்று கிடப்பதையோ, அல்லது உடைகளிலோ தரையிலோ எண்ணெய் கறை படிந்திருப்பதையோ கண்டால், அதைச் சுட்டிக்காட்டிச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழும்.
6
தொடக்கத்தில் திருமதி ரஃப்னரைக் கண்டு அஞ்சிய நான், காலப்போக்கில் அவரை எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராகக் கருதத் தொடங்கினேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடன் கழித்த ஒன்று அல்லது இரண்டு குளிர்காலங்களில் ஒரு பகுதியில் தினமும் ஒரு மணிநேரம் பள்ளிக்குச் செல்ல அவர் எனக்கு அனுமதி அளித்தார். இருப்பினும், நான் பெரும்பாலும் இரவிலேயே கல்வி பயின்றேன்; சில நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் ஒருவருக்கு பணம் கொடுத்து படித்தேன். கல்வி பெறுவதற்கான எனது அனைத்து முயற்சிகளிலும் திருமதி ரஃப்னர் எனக்கு ஊக்கமளித்ததுடன், என் மீது மிகுந்த அனுதாபமும் கொண்டிருந்தார். அவருடன் வாழ்ந்த காலத்தில், நான் எனது முதல் நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். ஒரு சரக்குப் பெட்டியை எடுத்து, அதன் ஒரு பகுதியை அகற்றிவிட்டு, உள்ளே சில தட்டுகளை அமைத்தேன். அதில் எனக்குக் கிடைத்த அனைத்து வகையான புத்தகங்களையும் அடுக்கி வைத்தேன்; அதை நான் எனது “நூலகம்” என்று அழைத்தேன்.
7
திருமதி ரஃப்னரின் இல்லத்தில் நான் என் வேளைகளில் திறமை பெற்றிருந்தபோதிலும், ஹாம்ப்ட்டன் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற எனது இலட்சியத்தைக் கைவிடவில்லை. 1872-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், எப்படியாவது அங்கு செல்ல வேண்டும் என்று நான் உறுதியெடுத்தேன். ஆனால், முன்பே குறிப்பிட்டது போல, ஹாம்ப்ட்டன் எங்கே இருக்கிறது என்பதோ அல்லது அங்கு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதோ எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ஹாம்ப்ட்டன் செல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை என் தாயைத் தவிர வேறு யாரும் முழுமனதுடன் ஆதரிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்; என் தாயின் முழுமையான ஆதரவு இருந்தாலும், அவர் கூட அப்பப்போ இது ஒரு வீணான முயற்சி, வெறும் கற்பனைத் திட்டம் என்றெல்லாம் ஆகிவிடுமோ என்று மிகுந்த கவலை கொள்வது எனக்கு தெரிந்தது. எப்படியோ, என் தாயிடமிருந்து ஒருவிதத் தயக்கத்துடனான சம்மதத்தைப் பெற்றுப் பயணத்தைத் தொடங்கினேன். நான் ஈட்டியிருந்த சொற்பப் பணத்தில், சில டாலர்களைத் தவிர மற்ற அனைத்தும் என் மாற்றாந்தந்தை அபகரித்துக்கொண்டதும் குடும்பத்தின் செலவுகளுக்கும் என்று தீர்ந்துபோயின. ஆகவே, ஆடைகள் வாங்கவும் பயணச் செலவுகளைச் ச
8
என் சகோதரன் ஜான் தன்னால் இயன்றவரை உதவினான்; ஆனால், அவனால் பெரிய அளவில் உதவ முடியவில்லை. அவன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்ததால் அவனுக்குக் கிடைத்த வருமானம் மிகக் குறைவு; மேலும், கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதி வீட்டுச் செலவுகளுக்கே செலவாகிவிட்டது.
9
நான் ஹாம்ப்ட்டனுக்குப் புறப்பட்டபோது, ​​கறுப்பினத்தைச் சேர்ந்த முதியவர்கள் பலர் காட்டிய ஆர்வம் என் மனதைத் தொட்டது, மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்தது. அவர்கள் தங்கள் வாழ்நாளின் சிறந்த ஆண்டுகளை அடிமைத்தனத்தில் கழித்தவர்கள்; தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கல்வி பயில வீட்டை விட்டு வெளியேறி, தங்கும் வசதி கொண்ட பள்ளிக்குச் செல்வதைக் காணும் காலம் வரும் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த முதியவர்களில் சிலர் எனக்கு ஐந்து சென்ட் நாணயத்தைக் கொடுத்தனர்; வேறு சிலர் இருபத்தைந்து சென்ட் நாணயத்தையோ அல்லது ஒரு கைக்குட்டையையோ அன்பளிப்பாக வழங்கினர்.
10
இறுதியாக அந்த நாள் வந்தது, நான் ஹாம்ப்ட்டனை நோக்கிப் புறப்பட்டேன். என்னிடம், என்னால் திரட்ட முடிந்த சில உடைகள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய, மலிவான பை மட்டுமே இருந்தது. அக்காலத்தில் என் தாயார் உடல்நலம் குன்றி, மிகவும் பலவீனமாக இருந்தார். அவரை மீண்டும் காண்பேன் என்று நான் நினைக்கவே இல்லை; அதனால், எங்கள் பிரிவு இன்னும் அதிகத் துயரமானதாக இருந்தது. இருப்பினும், அந்தச் சூழலிலும் அவர் மிகுந்த மன உறுதியுடன் இருந்தார். அக்காலத்தில், மேற்கு வர்ஜீனியாவின் அந்தப் பகுதியையும் கிழக்கு வர்ஜீனியாவையும் இணைக்கும் நேரடி ரயில் வசதிகள் ஏதும் இல்லை. ரயில்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்றன; மீதமுள்ள தூரத்தைக் கடக்க குதிரை வண்டிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
11
மால்டனிலிருந்து ஹாம்ப்ட்டன் வரையிலான தூரம் சுமார் ஐந்நூறு மைல்கள். வீட்டிலிருந்து புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே, ஹாம்ப்ட்டன் போய் சேர்வதற்கான பிரயாண கட்டணங்களை செலுத்த என்னிடம் போதிய பணம் இல்லை என்பது மிகவும் வேதனையான உண்மையாக தகவல் எனக்குத் புரிய ஆரம்பித்தது. என் வாழ்நாளில் நான் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம் இது. அன்று பிற்பகல் முழுவதும் மலைப்பகுதிகளின் வழியே ஒரு பழைய பாணி குதிரை வண்டியில் (stagecoach) பயணம் செய்துகொண்டிருந்தேன். மாலை நேரம் கடந்து இரவு நெருங்கியபோது, ​​அந்த வண்டி ஒரு தங்குமிடத்தில் நின்றது; அது 'ஹோட்டல்' என்று அழைக்கப்பட்டாலும், வர்ணம் பூசப்படாத, சாதாரணமான ஒரு வீடாகவே இருந்தது. என்னைத் தவிர மற்ற பயணிகள் அனைவரும் வெள்ளையினத்தவர்கள். அந்தச் சிறிய தங்குமிடம், குதிரை வண்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்காகவே இலவசமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைத்துக்கொண்டேன்.
12
ஒரு மனிதனின் தோலின் நிறம் அந்த அம்மனிதனுக்கு சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் முன்பே சிந்தித்திருக்கவில்லை. மற்ற பயணிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று, இரவு உணவிற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், நான் தயக்கத்துடன் வரவேற்பறையில் இருந்த நபரை அணுகினேன். என்னிடம் தங்குவதற்கோ அல்லது உணவு உண்பதற்கோ பணம் ஏதும் இல்லை; இருப்பினும், அந்த விடுதி உரிமையாளரின் கருணையைப் பெற்று, அந்த இரவு வேளையில் உள்ளே தங்க இடம்கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கலாம் என்று நம்பினேன். வர்ஜீனியா மலைப்பகுதிகளில் அந்தச் சமயத்தில் கடும் குளிர் நிலவியது, எனவே அந்த இரவைக் கழிப்பதற்காக எனக்கு ஒரு தங்குமிடம் தேவைப்பட்டது. என்னிடம் பணம் இருக்கிறதா என்று கூடக் கேட்காமல், அந்த நபர் எனக்கு உணவோ அல்லது தங்குமிடமோ வழங்க மறுத்துவிட்டார். எனது தோலின் நிறம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை நான் முதன்முதலில் உணர்ந்த தருணம் இதுதான். எப்படியோ, இரவு முழுவதும் அங்கும் இங்கும் நடந்து கொண்டே குளிரைத் தாங்கிக்கொண்டு அந்த இரவைக் கழித்தேன். ஹாம்ப்ட்டனைச் சென்றடைய வேண்டும் என்பதில் என் முழ
13
பயண பணம் தீர்ந்து போனதும், நடந்தும், வண்டிகளிலும் கார்களிலும் இலவச சவாரி கேட்டும் பயணம் செய்ததில், பல நாட்களுக்குப் பிறகு நான் ஹேம்ப்டனிலிருந்து சுமார் எண்பத்திரண்டு மைல் தொலைவில் இருந்த வர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைச் சென்றடைந்தேன். சோர்வுடனும், பசியுடனும், அழுக்கடைந்த நிலையிலும் நான் அங்கு சென்றடைந்தபோது, நள்ளிரவு ஆகியிருந்தது. இதற்கு முன்பு நான் இதுபோல் ஒரு பெரிய நகரத்திற்குச் சென்றதே இல்லை, இது என் பயத்தையும் துயரத்தையம் இன்னும் அதிகரித்தது. ரிச்மண்டிற்கு வந்தடைந்தபோது, ​​என்னிடம் ஒரு சதம் கூட இல்லை. அங்கு எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கவுமில்லை; நகர வாழ்க்கை முறை எனக்குப் பழக்கமில்லாததால், எங்கு செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. தங்குவதற்கு இடம் கேட்டு பல தங்கும் இடங்களுக்குச் சென்றேன், ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றில் நிறம் பார்த்து இல்லை என்றார்கள் அல்லது பணம் கேட்டனர்; என்னிடமோ அவர்கள் கேட்கும் நிறமும் இருக்கவில்லை பணமும் இருக்கவில்லை.
14
வேறு வழியே தெரியாததால், நான் தெருக்களில் நடந்து சென்றேன். அப்போது, ​​பொரித்த கோழி இறைச்சியும் அரைவட்ட வடிவிலான ஆப்பிள் பைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த பல உணவு விற்பனை நிலையங்களைக் கடந்து சென்றேன்; அவை வாசைனையாகவும் பார்ப்பதற்கு மிகவும் நாவூறச் செய்யும் வகையிழும் இருந்தன. அந்த நேரத்தில், ஒரு கோழித் துண்டையோ அல்லது ஒரு ஆப்பிள் பையையோ பெறுவதற்காக, எதிர்காலத்தில் எனக்குக் கிடைக்கப்போகும் அனைத்தையும் தருவதாகக் கூட நான் உறுதியளித்திருப்பேன். ஆனால், என்னால் ஒன்றையும் அல்லது எதையும் உண்ணுவதற்கு பெற முடியவில்லை.
15
நள்ளிரவு தாண்டும் வரை நான் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில், என்னால் களைப்படைந்தும் பசியுடனும் மேலும் நடக்க முடியாத அளவுக்கு மிகுந்த சோர்வடைந்தேன். ஆனால், மனச்சோர்வு மட்டும் அடையவில்லை. உடல் ரீதியாக முற்றிலும் சோர்ந்து போயிருந்த நிலையில், பள்ளமான இடமொன்றை கடக்கின்ற மரப்பலகைகளால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டிருந்த ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தேன். யாரும் என்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, அந்த நடைபாதைக்கு அடியில் இருந்த பள்ளத்தினூடே மெல்ல ஊர்ந்து சென்று, எனது துணிகள் அடங்கிய பையைத் தலையணையாகப் பயன்படுத்திக்கொண்டு, தரையில் படுத்து உறங்கினேன். இரவு முழுவதும் என் தலைக்கு மேலே மக்கள் நடந்து செல்லும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை, ஓரளவு புத்துணர்ச்சியுடன் எழுந்தாலும் நீண்ட காலமாகச் சரியான உணவை உட்கொள்ளாததால் மிகுந்த பசியுடன் சோர்வுடனும் இருந்தேன்.
16
காலை வெளிச்சம் சுற்றியுள்ளவற்றைப் பார்க்கும் அளவுக்கு வந்தவுடன், நான் ஒரு பெரிய கப்பலுக்கு அருகில் இருப்பதையும், அந்தக் கப்பலிலிருந்து இரும்புக்கட்டிகள் (pig iron) இறக்கப்படுவதையும் கவனித்தேன். நான் உடனடியாக அந்தக் கப்பலுக்குச் சென்று, அங்கிருந்த கேப்டனிடம், சரக்குகளை இறக்க உதவி செய்து, அதன் மூலம் உணவுக்கான பணத்தைச் சம்பாதித்துக்கொள்ள அனுமதி கேட்டேன். கனிவான குணம் கொண்டவராகத் தெரிந்த அந்த வெள்ளையின கேப்டன், அதற்குச் சம்மதித்தார். நான் சிறிது நேரம் உழைத்து, எனது காலை உணவிற்கான பணத்தைச் சம்பாதித்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, ​​அதுவே நான் இதுவரை உண்ட மிகச் சிறந்த காலை உணவாகத் தோன்றுகிறது.
17
நான் வேலை செய்யும் வேகமும் துல்லியமும் கேப்டனுக்கு மிகவும் திருப்தியளித்ததால், அவர் என்னிடம் தொடர்ந்து பணியாற்ற விருப்பமா என்றும், அவ்வாறு செய்தால் தினசரி ஒரு சிறிய ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறினார். நான் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அந்த கப்பலில் நான் தொடர்ந்து சில நாட்கள் பணியாற்றினேன். எனக்குக் கிடைத்த அந்தச் சிறிய ஊதியத்தில் உணவிற்கான செலவுகளைச் செய்த பிறகு, ஹாம்ப்ட்டன் செல்வதற்கான பயணச் செலவிற்குத் தேவையான தொகையில் சேர்ப்பதற்கு மிகக் சொற்பமான பணமே எஞ்சியிருந்தது. ஹாம்ப்ட்டனை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், செலவுகளை இயன்றவரை குறைப்பதற்காக, ரிச்மண்டிற்கு வந்த முதல் இரவில் நான் தங்கியிருந்த அதே நடைபாதையின் அடியிலேயே தொடர்ந்து உறங்கினேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரிச்மண்டில் வாழ்ந்த கறுப்பின மக்கள் எனக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்; அதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர். அந்த நகரில் நான் முதல் இரவைக் கழித்த இடத்திற்கு அருகிலேயே இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அன்பானதாகவும் இருந்தபோதிலும்,
18
ஹாம்ப்ட்டன் செல்வதற்குப் போதுமான பணம் என்று நான் கருதிய தொகையைச் சேமித்து முடித்ததும், கேப்டனின் கனிவான செயலுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மீண்டும் எனது பயணத்தைத் தொடங்கி இடையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி ஹாம்ப்ட்டனைச் சென்றடைந்தேன். எனது கல்வியைத் தொடங்குவதற்காக, என்னிடம் சரியாக ஐம்பது சென்ட்கள் இருந்தன. என்னைப் பொறுத்தவரை, அது நீண்ட, பல நிகழ்வுகள் நிறைந்த பயணமாக இருந்தது; ஆனால், அங்குள்ள மூன்று அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான செங்கல் பள்ளிக் கட்டிடத்தைக் கண்ட கணமே, அந்த இடத்தைச் சென்றடைவதற்காக நான் அனுபவித்த அனைத்துக் கஷ்டங்களுக்கும் ஒரு பலன் கிடைத்தது போல உணர்வு வந்து போனது.
19
அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பண உதவியளித்தவர்கள், அந்த கட்டிடம் என் மீதும், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தை தெரிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் மேலும் இத்தகைய நன்கொடைகளை வழங்குவதற்கு அதிக ஊக்கம் பெறுவார்கள். அதுவரை நான் கண்ட கட்டிடங்களிலேயே அதுதான் மிகப்பெரியதும் மிக அழகானதும் ஆகும். அந்த கட்டிடமும் அதன் நிலப்பரப்பும் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்தது. என் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இனி என் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தம் கிடைக்கப்போவதாகவும் உணர்ந்தேன். நான் ஏதோ ஒரு நிச்சயிக்கப்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்; உலகில் மிகச் சிறந்த நன்மைகளைச் செய்வதற்குத் தகுதியுடையவனாக என்னை மாற்றிக்கொள்ள, எந்தத் தடையும் என் முயற்சிகளுக்குத் தடையாக இருக்க அனுமதிக்கக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொண்டேன்.
20
ஹாம்ப்ட்டன் கல்லூரியின் வளாகத்தை அடைந்தவுடன், நேரடியாக வகுப்பில் சேருவதற்காக நான் தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். நீண்ட நாட்களாகச் சரியான உணவின்றி, குளிக்கவோ அல்லது மாற்று உடை அணியவோ வாய்ப்பின்றி இருந்ததால், அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைத்,மாணவராகச் சேர்த்துக்கொள்வது சரியான முடிவா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருப்பதை என்னால் உடனடியாக உணர முடிந்தது. நான் ஒரு நாடோடி அல்லது சுற்றித்திரியும் ஒரு சோம்பேறி என்று அவர் கருதினால், அதில் அவரை நான் குறை சொல்ல முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவர் என்னைச் சேர்த்துக்கொள்ள மறுக்கவும் இல்லை, அதே சமயம் அனுமதி வழங்கவும் இல்லை. எனவே, நான் அவ்விடத்திலேயே தொடர்ந்து இருந்தபடி, என் தகுதியை அவருக்கு உணர்த்தும் வகையில் என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தேன். இதற்கிடையில், அவர் மற்ற மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதைக் கண்டபோது, ​​என் மனதிற்குள் மிகுந்த சங்கடம் ஏற்பட்டது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், என்னுள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி, மற்ற மாணவர்களுக்கு இணையாக என்னாலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று என் ஆழ்மனதில் நான் உறுதியாக
21
சில மணிநேரங்கள் கடந்த பிறகு, தலைமை ஆசிரியர் என்னிடம், "அருகிலுள்ள பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும். துடைப்பத்தை எடுத்து அதைச் சுத்தம் செய்," என்றார்.
22
நான் எந்தவித அதிமறை கருத்துக்கும் இங்கே இடம் கொடாமல் இதுவே எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்று உடனே உணர்ந்தேன். இதற்கு முன்பு எனக்குக் கிடைத்த எந்தவொரு கட்டளையும் இவ்வளவு மகிழ்ச்சியைத் தந்ததில்லை. என்னால் கூட்டிச் சுத்தம் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்; ஏனென்றால், நான் திருமதி ரஃப்னருடன் வாழ்ந்தபோது, ​​அதை எப்படிச் செய்வது என்பதை அவர் எனக்கு மிகத் தெளிவாகக் கற்றுக்கொடுத்திருந்தார்.
23
நான் அந்த வகுப்பறையை மூன்று முறை பெருக்கினேன். பிறகு, ஒரு துணியை எடுத்துக்கொண்டு, அறையிலிருந்த தூசியை நான்கு முறை துடைத்தேன். சுவர்களைச் சுற்றியிருந்த மர வேலைப்பாடுகள், ஒவ்வொரு பெஞ்ச், மேஜை மற்றும் இருக்கை என அனைத்தையும் அந்தத் துணியால் நான்கு முறை துடைத்துச் சுத்தப்படுத்தினேன். அதுமட்டுமின்றி, அங்கிருந்த அனைத்து மரச்சாமான்களையும் நகர்த்தி, அறையின் ஒவ்வொரு அலமாரியையும் மூலையையும் மிக நுணுக்கமாகச் சுத்தம் செய்தேன். அந்த அறையைச் சுத்தம் செய்ததன் மூலம் ஆசிரியரிடம் நான் ஏற்படுத்தப்போகும் தாக்கமே, பெருமளவுக்கு எனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. வேலை முடிந்ததும், தலைமை ஆசிரியரிடம் சென்று தெரிவித்தேன். அவர் ஒரு 'யாங்கி' (வட அமெரிக்காவைச் சேர்ந்த) பெண்மணி; அழுக்கு எங்கே இருக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் அறைக்குள் சென்று தரையையும் அலமாரிகளையும் சோதித்தார்; பின்னர், தனது கைக்குட்டையை எடுத்து, சுவர்களைச் சுற்றியிருந்த மர வேலைப்பாடுகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளின் மீது தேய்த்துப் பார்த்தார். தரையில் அழுக்கோ, மரச்சாமான்களில் தூசியோ இல்லை என்ப
24
அந்த தருணம் இந்த பூமியிலேயே இருந்த மிகவும் மகிழ்ச்சியான மனிதர்களில் ஒருவனாக நானும் இருப்பதாக உணர்ந்தேன். அந்த அறையைச் சுத்தம் செய்தது எனது கல்லூரி நுழைவுத் தேர்வு போன்றிருந்தது; ஹார்வர்ட் அல்லது யேல் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகத் தேர்வு எழுதிய எந்தவொரு இளைஞனுக்கும், அந்தச் செயலில் கிடைத்ததைப் போன்ற உண்மையான மனநிறைவு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதன் பிறகு நான் பல தேர்வுகளை எழுதியிருக்கிறேன், ஆனால் நான் எதிர்கொண்ட தேர்வுகளிலேயே இதுதான் மிகவும் சவாலான தேர்வு என்று எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
25
ஹாம்ப்ட்டன் கல்லூரியில் சேர்ந்த எனது அனுபவத்தைப் போன்ற அனுபவத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே, ஒருவேளை எவருமே இல்லாமலும் இருக்கலாம். இருப்பினும், அதே காலகட்டத்தில், நான் எதிர்கொண்டது போன்ற சிரமங்களைச் சந்தித்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஹாம்ப்ட்டன் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைச் சென்றடைந்தனர். அவர்கள் எப்படியாவது கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
26
வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்துகொண்டே நான் ஹாம்ப்ட்டன் கல்லூரியில் எனது படிப்பைத் தொடர முடிந்தது. தலைமை ஆசிரியையான மிஸ் மேரி எஃப். மேக்கி (Miss Mary F. Mackie) எனக்கு ஒரு துப்புரவுப் பணியாளர் வேலையை வழங்கினார். நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்; அந்த வேலையின் மூலம் எனது தங்குமிடச் செலவில் பெரும்பகுதியை என்னால் ஈடுகட்ட முடிந்தது. அந்தப் பணி மிகவும் கடினமானதாகவும், அதிக உழைப்பைக் கோருவதாகவும் இருந்தது, இருப்பினும் நான் தளராமல் தொடர்ந்து செய்தேன். நான் பல அறைகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது, அதற்காக நள்ளிரவு வரை உழைக்க வேண்டியிருந்தது. அதே சமயம், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அடுப்புகளில் தீ மூட்டவும், எனது பாடங்களுக்குத் தயாராகச் சிறிது நேரம் ஒதுக்கவும் வேண்டியிருந்தது. ஹாம்ப்ட்டனில் நான் பயின்ற காலம் முழுவதிலும், அதன் பிறகு நான் வெளி உலக வாழ்க்கையில் நுழைந்த காலத்திலும், நான் தலைமை ஆசிரியை மிஸ் மேரி எஃப். மேக்கி, எனக்கு மிகவும் உறுதுணையாகவும், சிறந்த நண்பராகவும் இருந்தார். மிகவும் இக்கட்டான தருணங்களில், அவருடைய அறிவுரைகளும் ஊக்கமும் எனக்குப் பெரும் பலமாக அமைந்தன.
27
ஹாம்ப்ட்டன் கல்லூரியின் கட்டிடங்களும் அதன் ஒட்டுமொத்த தோற்றமும் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், என் மீது மிக முக்கியமான மற்றும் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விஷயத்தைப் பற்றி நான் இன்னும் சொல்லவில்லை; அது ஒரு மாமனிதரைப் பற்றியது. நான் இதுவரை சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் உன்னதமான, மிக அரிதான அந்த மனிதர், மறைந்த ஜெனரல் சாமுவேல் சி. ஆம்ஸ்ட்ராங் ஆவார்.
28
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல சிறந்த ஆளுமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இருப்பினும், ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு இணையான ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. அடிமைத் தோட்டங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும் நிலவிய இழிவான சூழலில் இருந்து வந்த எனக்கு, ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் போன்ற ஒரு மனிதருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரும் பேறாகும். அவரை முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் ஒரு முழுமையான மனிதராக எனக்குத் தோன்றினார்; அவரிடம் ஏதோ ஒரு அதீத மனிதத்தன்மை (மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று) இருப்பதை என்னால் உணர முடிந்தது. இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
29
நான் ஹாம்ப்ட்டன் கல்லூரியில் சேர்ந்த காலம் முதல், ஜெனரல் ஆர்ம்ஸ்ட்ராங் (General Armstrong) காலமாகும் வரை, அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். அவருடன் நெருங்கிப் பழகப் பழக, அவர் மீதான எனது மதிப்பும் மரியாதையும் மேலும் அதிகரித்தன. ஹாம்ப்ட்டன் நிறுவனத்திலிருந்து அனைத்துக் கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் பயிற்சிக் கூடங்களை நீக்கிவிட்டு, அங்குள்ள மாணவர்-மாணவியருக்கு ஜெனரல் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் அன்றாடம் பழகும் வாய்ப்பை மட்டும் வழங்கியிருந்தால், அதுவே அவர்களுக்கு ஒரு முழுமையான கல்வியாக அமைந்திருக்கும். வயது முதிர முதிர, புத்தகங்களிலிருந்தோ அல்லது விலையுயர்ந்த உபகரணங்களிலிருந்தோ பெறக்கூடிய கல்வியை விட, சிறந்த மனிதர்களுடனான தொடர்பின் மூலம் பெறக்கூடிய கல்வியே மேலானது என்பதில் எனக்கு உறுதி கூடுகிறது. நம் பள்ளிகளும் கல்லூரிகளும், எப்போதும் புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மனிதர்களையும் உலக நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்!
30
ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் தனது வாழ்நாளின் கடைசி ஆறு மாதங்களில் இரண்டு மாதங்களை டஸ்கீகியில் உள்ள எனது இல்லத்தில் கழித்தார். அக்காலகட்டத்தில், அவர் உடல் மற்றும் குரல் மீதான கட்டுப்பாட்டை பெருமளவுக்கு இழக்கும் வகையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இத்தகைய உடல்நலக் குறைபாட்டிற்கு மத்தியிலும், தனது வாழ்நாளை அர்ப்பணித்திருந்த அந்த உன்னத நோக்கத்திற்காக, அவர் இரவு பகலாக இடைவிடாது உழைத்தார். தன்னைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காத ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவரிடம் சுயநலமான எண்ணம் இருந்ததாகவே எனக்குத் தோன்றவில்லை. ஹாம்ப்ட்டன் கல்லூரிக்காக உழைப்பது போலவே, தெற்குப் பகுதியில் உள்ள பிற நிறுவனங்களுக்கு உதவுவதிலும் அவர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். உள்நாட்டுப் போரில் தெற்குப் பகுதி வெள்ளையர்களுக்கு எதிராகப் போரிட்டிருந்தாலும், அதன் பிறகு அவர்களைப் பற்றி ஒரு கசப்பான சொல்லைக் கூட அவர் பேசியதை நான் கேட்டதில்லை. மாறாக, தெற்குப் பகுதி வெள்ளையர்களுக்குச் சேவை செய்வதற்கான வழிகளை அவர் எப்போதும் தேடிக்கொண்டே இருந்தார்.
31
ஹாம்ப்ட்டன் கல்லூரியில் இருந்த மாணவர்கள் மீது அவர் கொண்டிருந்த செல்வாக்கையோ அல்லது அவர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையையோ விவரிப்பது எளிதான காரியமல்ல. சொல்லப்போனால், மாணவர்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றினர். ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் அவர் தோல்வியடைவார் என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. அவர் விடுத்த எந்தவொரு கோரிக்கையையும் மறுக்காமல் நிறைவேற்ற மாணவர்கள் தயாராகவே இருந்தனர். அலபாமா மாநிலத்தில் இருந்த எனது இல்லத்திற்கு அவர் விருந்தினராக வந்திருந்தபோது, ​​அவர் கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்; அதனால் அவர் சக்கர நாற்காலியில்தான் அமர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது, ​​அவரது முன்னாள் மாணவர் ஒருவர், மிகவும் செங்குத்தான ஒரு நீண்ட மலைப்பாதையில், தனது முழு பலத்தையும் திரட்டி, அந்தச் சக்கர நாற்காலியைத் தள்ளிச் சென்ற காட்சி இன்றும் என் நினைவில் உள்ளது.
32
குன்றின் உச்சியை அடைந்தபோது, ​​அந்த முன்னாள் மாணவர், முகத்தில் மகிழ்ச்சி பொங்க, இவ்வாறு கூறினார்: "ஜெனரல் இறப்பதற்கு முன்பாக, அவருக்காக ஒரு கடினமான காரியத்தைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! நான் ஹாம்ப்ட்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது, ​​தங்கும் விடுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டது; சேர விரும்பிய அனைவருக்கும் அங்கு இடவசதி இல்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க, தற்காலிக அறைகளாகப் பயன்படுத்தக் கூடாரங்களை அமைக்கும் திட்டத்தை ஜெனரல் உருவாக்கினார். குளிர்காலத்தில் சில மூத்த மாணவர்கள் கூடாரங்களில் தங்கினால் ஜெனரல் ஆர்ம்ஸ்ட்ராங் மகிழ்ச்சியடைவார் என்று தெரிந்தவுடன், பள்ளியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் தாமாக முன்வந்து அதற்குச் சம்மதித்தனர்."
33
நான் தன்னார்வலர்களில் ஒருவனாக இருந்தேன். அந்த கூடாரங்களில் நாங்கள் கழித்த குளிர்காலம் மிகுந்த குளிரைக் கொண்டிருந்தது; நாங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானாலும் எந்தப் புகாரும் தெரிவிக்காததால், ஜெனரல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இதைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். அவருக்கு மகிழ்ச்சியளிப்பதும், மேலும் பல மாணவர்கள் கல்வி பெறுவதற்கு உதவுவதுமே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. வழக்கமாக, அதிகாலையில் ஜெனரல் அந்த கூடாரங்களுக்கு வருவார்; அவரது ஆர்வமிக்க, உற்சாகமான, ஊக்கமளிக்கும் குரல், எங்களிடம் இருந்த சோர்வு அல்லது மனச்சோர்வு உணர்வுகளை முழுமையாக நீக்கிவிடும். கடும் குளிரும் பலத்த காற்றும் வீசிய ஒரு இரவில், எங்கள் கூடாரம் அப்படியே தூக்கி எறியப்பட, நாங்கள் திறந்த வெளியில் நின்றுகொண்டிருந்தோம்.
34
ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் மீது எனக்குள்ள மதிப்பைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், அவர் ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமல்ல; போரின் முடிவில், கறுப்பின மக்களுக்கான பள்ளிகளுக்குச் சென்று, என் இனத்தவர் முன்னேற உதவ முன்வந்த, கிறிஸ்துவைப் போன்ற பண்புகளைக் கொண்ட அந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு குழுவின் அடையாளமாகவே அவர் திகழ்ந்தார். கறுப்பின மக்களுக்கான அந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆண்களையும் பெண்களையும் விட, மேன்மையான, தூய்மையான, சுயநலமற்ற மனிதர்களை உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாது.
35
ஹாம்ப்ட்டன் வாழ்க்கை எனக்கு ஒரு தொடர்ச்சியான புது அனுபவமாக இருந்தது; அது என்னை இடைவிடாது ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு உணவருந்துவது, மேஜை விரிப்பின் மீது அமர்ந்து சாப்பிடுவது, நாப்கினைப் பயன்படுத்துவது, குளியல் தொட்டி மற்றும் பல் துலக்கும் பிரஷ்ஷைப் பயன்படுத்துவது, படுக்கையில் விரிப்புகளைப் பயன்படுத்துவது என இவை அனைத்தும் எனக்கு முற்றிலும் புதிய விஷயங்களாக இருந்தன.
36
ஹாம்ப்ட்டன் கல்லூரியில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிகவும் மதிப்புமிக்க ஒன்று, குளிப்பதின் பயன்பாடும் அதன் அவசியமும் என்று எனக்குத் தோன்றுகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மட்டுமின்றி, சுயமரியாதையை வளர்ப்பதற்கும் நற்பண்புகளை ஊக்குவிப்பதற்கும் குளியல் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் முதன்முதலில் அங்கேயே கற்றுக்கொண்டேன். ஹாம்ப்ட்டனை விட்டு வெளியேறிய பிறகு, தெற்குப் பகுதியிலும் பிற இடங்களிலும் நான் பயணம் செய்தபோதெல்லாம், எப்படியாவது தினமும் குளிப்பதற்கான வழியைத் தேடிக்கொண்டே இருந்தேன். சில சமயங்களில், எனது இனத்தைச் சேர்ந்தவர்களின் ஒற்றை அறை கொண்ட குடிசைகளில் விருந்தினராகத் தங்கியிருந்தபோது, ​​காட்டில் உள்ள ஏதேனும் ஒரு நீரோடைக்குச் சென்று குளிப்பதைத் தவிர வேறு வழியில்லாத சூழலும் இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் குளிப்பதற்குத் தகுந்த வசதி இருக்க வேண்டும் என்பதை என் மக்களுக்கு உணர்த்த நான் எப்போதும் முயன்று வருகிறேன்.
37
ஹாம்டன் கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில், என்னிடம் ஒரே ஒரு ஜோடி காலுறைகள் மட்டுமே இருந்தன; அவை அழுக்காகும் வரை நான் அவற்றை அணிந்திருப்பேன். பிறகு, இரவு நேரத்தில் அவற்றைச் துவைத்து, மறுநாள் காலையில் மீண்டும் அணிந்துகொள்ள ஏதுவாக, நெருப்புக்கு அருகில் காய வைப்பேன்.
38
ஹாம்ப்ட்டன் கல்லூரியில் எனது தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மாதத்திற்கு பத்து டாலர்களாக இருந்தது. இதில் ஒரு பகுதியை ரொக்கமாகவும், மீதமுள்ள பகுதிக்கு அங்கு வேலை செய்தும் ஈடுசெய்ய வேண்டியிருந்தது. இந்த ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்காக, நான் அந்த கல்லூரியைச் சென்றடைந்தபோது என்னிடம் வெறும் ஐம்பது சென்ட்கள் மட்டுமே இருந்தன. எனது சகோதரர் ஜான் அவ்வப்போது அனுப்பும் சில டாலர்களைத் தவிர, தங்குமிடச் செலவைச் செலுத்த என்னிடம் வேறு பணம் ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே, ஒரு துப்புரவுப் பணியாளராகிய எனது வேலையை மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றவும், அதன் மூலம் நான் அந்த நிறுவனத்திற்கு இன்றியமையாத நபராக மாறவும் உறுதியுடன் செயல்பட்டு வெற்றியும் பெற்றேன்; அதன் விளைவாக, எனது உழைப்பிற்காக எனது முழு தங்குமிடச் செலவும் (உணவு உட்பட) ரத்து செய்யப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
39
கல்விக் கட்டணம் ஆண்டுக்கு எழுபது டாலர்களாக இருந்தது. என்னால் இத்தொகையைச் செலுத்தவே முடியாது என்பது உறுதி. தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளுடன், கல்விக் கட்டணமாக இந்த எழுபது டாலர்களையும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால், நான் ஹாம்ப்ட்டன் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், ஜெனரல் ஆம்ஸ்ட்ராங் மிகுந்த கருணையுடன், மாசசூசெட்ஸின் நியூ பெட்ஃபோர்டைச் சேர்ந்த திரு. எஸ். கிரிஃபிட்ஸ் மோர்கன் என்பவரை அணுகி, நான் ஹாம்ப்ட்டனில் இருந்த முழு காலத்திற்குமான கல்விக் கட்டணத்தை அவரே ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்தார். ஹாம்ப்ட்டனில் படிப்பை முடித்து, டஸ்கீகியில் எனது வாழ்நாள் பணியைத் தொடங்கிய பிறகு, திரு. மோர்கனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு பலமுறை கிடைத்தது.
40
ஹாம்ப்ட்டனில் இருந்த காலத்தில், என்னிடம் புத்தகங்களோ புதிய உடைகளோ இல்லாததால் நான் மிகுந்த சிரமத்திற்குள்ளானேன். இருப்பினும், புத்தகங்கள் தொடர்பான சிக்கலை, என்னைக் காட்டிலும் வசதி படைத்தவர்களிடமிருந்து அவற்றைப் இரவல் பெறுவதன் மூலம் சமாளித்துக்கொண்டேன். உடைகளைப் பொறுத்தவரை, நான் ஹாம்ப்ட்டனுக்கு வந்தபோது என்னிடம் உண்மையில் எதுவுமே இல்லை; என்னிடமிருந்த அனைத்தும் ஒரு சிறிய கைப்பையில்தான் இருந்தன. உடைகள் குறித்த எனது கவலை மேலும் அதிகரித்தது, ஏனெனில் ஜெனரல் ஆம்ஸ்ட்ராங், மாணவர்கள் அணிவகுத்து நிற்கும்போது அவர்களின் உடைகள் சுத்தமாக இருக்கின்றனவா என்று நேரில் வந்து ஆய்வு செய்வார். காலணிகள் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும், உடைகளில் பொத்தான்கள் விடுபட்டிருக்கக் கூடாது, மேலும் எந்தவிதமான எண்ணெய் கறைகளும் படிந்திருக்கக் கூடாது என்பது கட்டாயமாக இருந்தது.
41
வேலை செய்யும் இடத்திலும் வகுப்பறையிலும் ஒரே உடையை அணிந்துகொண்டு, அதைச் சுத்தமாகப் பராமரிப்பது எனக்கு ஒரு கடினமான சவாலாக இருந்தாலும் நான் அதை சமாளித்து வந்தேன்; என் தீவிரமான ஆர்வத்தையும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியையும் ஆசிரியர்கள் புரிந்துகொண்ட பிறகு, அவர்களில் சிலர் எனக்கு உதவ முன்வந்தனர். வடக்கிலிருந்து பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த பழைய உடைகளை எனக்குக் கிடைக்கச் செய்தனர். இத்தகைய பொதிகள், ஏழைகளாக இருந்தாலும் கல்வி கற்கத் தகுதியுடைய நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. அவை இல்லையென்றால், என்னால் ஹாம்ப்ட்டன் (Hampton) கல்லூரியில் படிப்பை முடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
42
நான் முதன்முதலில் ஹாம்ப்ட்டனுக்குச் சென்றபோது, ​​இரண்டு விரிப்புகள் கொண்ட படுக்கையில் தூங்கியதாக எனக்கு நினைவில்லை. அக்காலத்தில் அங்கு அதிகக் கட்டிடங்கள் இல்லை, எனவே இடவசதி மிகவும் அரிதாக இருந்தது. நான் தங்கியிருந்த அறையில் என்னைத் தவிர மேலும் ஏழு சிறுவர்கள் இருந்தனர்; அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே அங்கு சில காலம் தங்கியிருந்த மாணவர்கள். அந்த விரிப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். எனக்கோ புரியாத புதிராக இருந்தது. முதல் இரவு, நான் அந்த இரண்டு விரிப்புகளுக்கும் அடியில் படுத்துக்கொண்டேன்; இரண்டாம் இரவு, அவற்றின் மேல் படுத்துக்கொண்டேன். ஆனால், மற்ற சிறுவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதைக் கவனித்ததன் மூலம், அதற்கான சரியான முறையைக் கற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து அதையே பின்பற்றி வருகிறேன், மற்றவர்களுக்கும் அதைக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.
43
அக்காலத்தில் ஹாம்ப்ட்டன் கல்லூரியில் இருந்த மிக இளைய மாணவர்களில் நானும் ஒருவன். அங்கு பயின்றவர்களில் பெரும்பாலானோர் ஆண்களும் பெண்களும் ஆவர்; அவர்களில் சிலர் நாற்பது வயது வரை முதிர்ந்தவர்களாகவும் இருந்தனர். எனது முதல் ஆண்டின் சூழலை நினைவுகூரும்போது, ​​மிகுந்த தீவிரமான எண்ணங்கள் கொண்ட முன்னூறு அல்லது நானூறு பேர்களுடன் பழகும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைப்பது அரிதான ஒன்று என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மணி நேரமும் படிப்பிலோ அல்லது பணியிலோதான் செலவிடப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு, நிஜ உலக அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.
44
வயதானவர்களில் பலர், பாடப்புத்தகங்களை மிகவும் முழுமையாக தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் வயதானவர்களாக இருந்தனர், மேலும் அவர்களின் படிப்புடன் போராடுவதிப் பார்ப்பது பெரும்பாலும் வருத்தமாக இருந்தது:, ஆனால் அவர்கள் புத்தகங்களில் இல்லாதவற்றை ஆர்வத்துடன் உருவாக்கினர். பலர் என்னைப் போலவே ஏழைகளாக இருந்தனர், மேலும் அவர்கள் தங்கள் புத்தகங்களுடன் போராடுவதோடு மாத்திரமல்ல அவர்கள் தங்கள் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது, அவர்களில் பலருக்கு வயது முதிர்ந்த பெற்றோர்கள் அவர்களைச் சார்ந்து இருந்தனர், மேலும் சிலர் தங்கள் மனைவிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய ஆண்களாக இருந்தனர்.
45
அவரது இல்லத்தில் இருந்தவர்களை மேம்படுத்தத் தயாராக வேண்டும் என்பதே அனைவரிடமும் நிலவிய பொதுவான எண்ணமாக இருந்தது. எவரும் தங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அங்கு பணியாற்றிய அதிகாரிகளும் ஆசிரியர்களும் எவ்வளவு அற்புதமான மனிதர்கள்! அவர்கள் பகலும் இரவும், காலமும் சூழலும் எதுவாக இருந்தாலும், மாணவர்களுக்காகவே உழைத்தனர். மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவ முடிந்தால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், கறுப்பின மக்களின் கல்விக்காக 'யாங்கி' (வடக்கு மாநிலங்களைச் சேர்ந்த) ஆசிரியர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து என்றாவது எழுதப்படும்போது, ​​அது இந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் சிலிர்ப்பூட்டும் அத்தியாயங்களில் ஒன்றாக அமையும். ஒட்டுமொத்த தெற்குப் பகுதியும், இதுவரை உணர்ந்திராத வகையில், இந்தச் சேவையின் அருமையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
46
★