தமிழில்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்
Subhashini.org
  
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 1
அடிமைகளினுள் ஓர் அடிமை

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
35 reads • Oct 2026
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 2
சிறுவயது நாட்கள்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
17 reads • Oct 2026
அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 3
கல்விக்கான போராட்டம்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
19 reads • Oct 2026


Write a Review





அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் 1
அடிமைகளினுள் ஓர் அடிமை

புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

35 reads • Oct 2026 • 3616 words • 48 rows

 in English   தமிழில்
  நான் வர்ஜீனியாவின் பிராங்க்ளின் கவுண்டியில் உள்ள ஒரு பண்ணையில் அடிமையாகப் பிறந்தவன். எனது பிறப்பு நிகழ்ந்த சரியான இடமோ அல்லது தேதியோ எனக்குத் துல்லியமாகத் தெரியாது; இருப்பினும், அங்கு ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு காலத்தில் நான் பிறந்திருக்க வேண்டும் என்பது உறுதி. நான் சேகரித்த தகவல்களின்படி,'ஹேல்ஸ் ஃபோர்டு' (Hale's Ford) என்று அழைக்கப்பட்ட, சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த தபால் நிலையத்திற்கு அருகில் நான் பிறந்திருக்கலாம்; அது 1858 அல்லது 1859-ஆம் ஆண்டாக இருக்கலாம். பிறந்த மாதமோ அல்லது தேதியோ எனக்குத் தெரியாது. எனது நினைவில் எஞ்சியிருக்கும் மிகத் தொடக்ககாலக் காட்சிகள், அந்தப் பண்ணையையும், அங்கு அடிமைகள் வாழ்ந்த குடியிருப்புகளையும், அடிமைகளுக்கான குடிசைகள் அமைந்திருந்த அந்தப் பண்ணைப் பகுதியையும் குறித்தவை மாத்திரமே.
1
நான் ஏறத்தாழ பதினான்குக்கு பதினாறு சதுர அடி அளவுள்ள, மரக்கட்டைகளால் ஆன ஒரு சாதாரண குடிசையில் தான் பிறந்தேன். உள்நாட்டுப் போர் முடிந்து, நாங்கள் அனைவரும் சுதந்திரமானவர்களாக அறிவிக்கப்படும் வரை, என் தாயார், சகோதரர் மற்றும் சகோதரியுடன் அந்தக் குடிசையில் தான் வாழ்ந்தோம். மிகவும் சோகம் நிறைந்த, வெறிச்சோடிய, நம்பிக்கையற்ற சூழலில்தான் எனது வாழ்க்கை ஆரம்பமானது. இருப்பினும், இதற்கு என் எஜமானர்கள் கொடூரமானவர்களாக இருந்தது மாத்திரம் காரணமல்ல. மற்ற பலருடன் ஒப்பிடும்போது அவர்கள் அதீத கொடூரமானவர்களாக இருந்தது இல்லை.
2
எனது வம்சாவளியைப் பற்றி எனக்கு ஏறக்குறைய எதுவுமே தெரியாது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் வாழ்ந்த குடியிருப்புகளில், அதற்கு அப்பாலும் கூட, கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பல விடயங்கள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைக்கப்பல்களில் கொண்டு வரப்பட்டபோது, ​​அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அக்கப்பல் பயணத்தின்போது அனுபவித்த சித்திரவதைகளைப் பற்றியே அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டனர். இதில் நிச்சயமாக என் தாயின் வழி முன்னோர்களும் அடங்குவர் என்பதில் எனது சந்தேகமும் இல்லை. இருப்பினும் என் தாய்க்கு முந்தைய எனது குடும்ப வரலாற்றைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவும் எந்தத் தகவலையும் என்னால் இவர்கள் பேச்சிலிருந்து கண்டெடுக்க முடியவில்லை.
3
என் தாய்க்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரனும் சகோதரியும் இருந்தனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அடிமை முறை நிலவிய காலத்தில், கறுப்பின மக்களின் குடும்ப வரலாறு அல்லது குடும்ப ஆவணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. என் தாயார், ஒரு அடிமை வியாபாரியினால் வாங்கப்பட்டு பின் அந்த வியாபாரி என் தாய்க்கும் எனக்கும் உரிமையாளரானார். அந்த குடும்பத்தில் ஒரு அடிமையாக என் தாய் இணைந்தது, ஒரு புதிய குதிரையையோ அல்லது பசுவையோ வாங்குவதைப் போன்றதாகத்தான் இருந்தது.
4
என் தாயைப் பற்றியே எனக்குக் குறைவாகத்தான் தெரியும் என்றால், என் தந்தையைப் பற்றி அதைவிடக் குறைவாகவே எனக்குத் தெரியும். அவருடைய பெயர் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. அவர் அருகில் இருந்த பண்ணைகளில் ஒன்றில் வாழ்ந்த ஒரு வெள்ளையர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் யாராக இருந்தாலும், என் மீது அவர் எந்தவிதமான அக்கறையும் காட்டியதாகவோ அல்லது என் வளர்ப்பிற்கு எந்த வகையிலும் உதவியதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இதற்காக நான் அவரை மட்டும் குறிப்பாகக் குறை கூறவில்லை. அக்காலத்தில் அந்த தேசத்தில் துரதிர்ஷ்டவசமாக வேரூன்றியிருந்த ஒரு சமூக அமைப்பின், மற்றொரு துரதிர்ஷ்டவசமான பலியாடுதான் அவரும்.
5
நாம் வாழ்ந்த குடிசை எங்கள் வசிப்பிடமாக மட்டுமன்றி, பண்ணையின் சமையலறையாகவும் பயன்படுத்தப்பட்டது. என் தாயார் அந்தப் பண்ணையின் சமையல்காரராக இருந்தார். அக்குடிசையில் கண்ணாடி ஜன்னல்கள் இல்லை; அதற்குப் பதிலாகச் சுவர்களில் திறந்தவெளிகள் மட்டுமே இருந்தன. அவற்றின் வழியாக வெளிச்சமும், குளிர்காலத்தின் கடும் குளிர்க்காற்றும் உள்ளே சரளமாக வந்து போயின. அக்குடிசைக்கு ஒரு கதவு என்று சொல்லிக்கொள்கின்ற அளவுக்கு ஒரு அடைப்பு இருந்தது. அது கதவு நிலையுடன் உடைந்துபோன கீல்கலினால்(Hinge) பெரிய விரிசல்களுடன் தொங்கிக்கொண்டிருந்தது. மேலும் அக்கதவு மிகவும் சிறியதாக இருந்ததால், அந்த அறை எப்போதும், நாம் வாழும்போதும், பண்ணைக்கு சமைக்கும் பொழுதும் மிக அசௌகரியமான ஒரு இடமாகவே இருந்தது.
6
இவை தவிர, அறையின் கீழ் வலது மூலையில் “பூனை நுழைவாயில்” (cat-hole) என்று ஒன்று இருந்தது. இது அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலத்தில் வர்ஜீனியாவில் இருந்த பெரும்பாலான மாளிகைகள் அல்லது குடிசைகளில் காணப்பட்ட ஒரு அமைப்பாகும். சுமார் ஏழுக்கு எட்டு அங்குல அளவுள்ள இந்தச் சதுர வடிவ நுழைவாயில், பூனைகள் இரவு நேரத்தில் தங்களுக்கு விருப்பம்போல வீட்டிற்குள் வரவும் வெளியே செல்லவும் வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் வசித்த அந்தச் சிறிய குடிசையைப் பொறுத்தவரை, இத்தகைய வசதி எதற்காகத் தேவைப்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை; ஏனெனில், பூனைகள் சர்வசாதாரணமாக உள்ளே வந்துபோக அந்தக் குடிசையில் ஏற்கனவே அரை டஜனுக்கும் மேற்பட்ட ஓட்டை ஒடிசல்கள் இருந்தன.
7
எங்கள் குடிசையில் மரத்தாலான தரை இல்லை; வெறும் நிலமே தரையாக இருந்தது. அந்த மண் தரையின் நடுவில், பலகைகளால் மூடப்பட்ட ஒரு பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது. குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்குகளைச் சேமித்து வைப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது. கிழங்குகளை உள்ளே வைக்கும்போதோ அல்லது வெளியே எடுக்கும்போதோ, எனக்கு ஒன்று அல்லது இரண்டு கிழங்குகளை எனக்காக நான் எடுத்துக்கொள்வேன். அவற்றை நான் சுட்டுச் சாப்பிட்டு மிகவும் ரசித்ததுண்டு; அது மாத்திரம் தான் எனக்கு அன்றைய காலங்களில் ஒரு அன்றைய வயதின் பொழுதுபோக்காக இருந்ததால் அந்த 'கிழங்குப் பள்ளம்' குறித்த நினைவுகள் என் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்திருக்கிறது.
8
எங்கள் பண்ணையில் சமையல் அடுப்பு எதுவும் இல்லை. வெள்ளையர்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் தேவையான அனைத்து உணவுகளையும் என் தாயார் திறந்த அடுப்பில்தான் சமைக்க வேண்டியிருந்தது; இதற்காக அவர் பெரும்பாலும் பானைகளையும் வாணலிகளையும் பயன்படுத்தினார். குளிர்காலத்தில், சரியாகக் கட்டப்படாத அந்தச் சிறு குடிசை எங்களைக் குளிரால் வாட்ட, கோடைகாலத்திலோ, அந்தத் திறந்த அடுப்பிலிருந்து வரும் வெப்பம் எங்களை சமமமான அசௌகரியத்தை உள்ளாக்கியது.
9
சிறிய குடிசையில் கழிந்த எனது வாழ்வின் தொடக்க ஆண்டுகள், அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பிற மக்களின் வாழ்க்கையிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டிருக்கவில்லை. பகல் நேரத்தில் தனது பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்த என் தாய்க்குப் போதிய நேரம் இருக்கவில்லை. அதிகாலையில் அவர் தனது வேலை தொடங்குவதற்கு முன்பாகவும், பின் நாள் முழுவதும் வேலை செய்த பிறகு இரவிலும், எங்களைக் கவனித்துக்கொள்ளச் சிறிது நேரத்தை எப்படியோ ஒதுக்கிக்கொள்வார்.
10
எனது மிக ஆரம்பகால நினைவுகளில் ஒன்று, என் தாய் நள்ளிரவில் கோழி இறைச்சி சமைத்து, தூங்கிக்கொண்டிருந்த தன் பிள்ளைகளை எழுப்பி எங்களுக்கு உணவளித்ததுதான். அவர் அதை எப்படி அல்லது எங்கிருந்து கொண்டு வந்தார் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும், அது எங்கள் எஜமானரின் பண்ணையிலிருந்துதான் பெறப்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். இதை அவர் திருடிதான் கொண்டுவந்தார் என்று கூட சொல்லலாம். இன்றைய காலத்தில் இத்தகைய செயல் நடந்தால், நான் அதைத் திருட்டு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அன்றைய சூழலையும், அதற்கான காரணத்தையும் கருத்தில் கொள்ளும்போது, ​​அதை திருட்டு என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிடமுடியாது.
11
என் தாய் ஒரு அடிமைத்தனம் எனும் அமைப்பின் ஒரு பலிக்கடாவாகவே வாழ்ந்தார். 'விடுதலைப் பிரகடனம்' (Emancipation Proclamation) மூலம் எங்கள் குடும்பம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்படும் வரை, நான் ஒரு மெத்தை படுக்கையிலோ அல்லது மென்மையான விரிப்பிலோ தூங்கியதாக எனக்கு நினைவில்லை. என் மூத்த சகோதரர் ஜான், என் சகோதரி அமண்டா மற்றும் நான் ஆகிய மூவரும், மண் தரையில் விரிக்கப்பட்ட ஒரு படுக்கையில், இன்னும் துல்லியமாகச் சொன்னால், மண் தரையில் கிடந்த அழுக்கடைந்த கந்தல் துணிகளின் குவியலில் தான் தூங்கினோம்.
12
எனது இளமைப் பருவத்தில் நான் ஈடுபட்ட விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்குகள் குறித்து ஏதேனும் கூறுமாறு சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்வி கேட்கப்படும் வரை, எனது வாழ்க்கையில் விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலம் என்று எதுவுமே இல்லை என்பது என் கவனத்திற்கு வரவில்லை. எனக்கு நினைவிருக்கக்கூடிய காலத்திலிருந்தே, எனது வாழ்நாளின் ஏறக்குறைய ஏதோ ஒரு வகை உடல் உழைப்பிலேயே ஒவ்வொரு நாளும் கழிந்திருந்தது; விளையாட்டிற்காக எனக்கு நேரம் கிடைத்திருந்தால், நான் இன்று இன்னும் ஒரு உயர் நிலையிலுள்ள ஒருவனாக இருந்திருப்பேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
13
அடிமைத்தனத்தில் இருந்த காலத்தில், நான் பெரிய உடல்பலம் கொண்டவனாக இல்லாமால் இருந்ததால் பெரிய அளவில் உடல் பலம் தேவைப்பட்ட பணிகளைச் செய்ய முடியவில்லை; இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் முற்றத்தைச் சுத்தம் செய்வது, வயல்வெளிகளில் வேலை செய்யும் ஆண்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வது, அல்லது வாரத்திற்கு ஒருமுறை சோளத்தை அரைப்பதற்காக ஆலைக்குக் கொண்டு செல்வது போன்ற வேலைகளில் மாத்திரம் தான் நான் ஈடுபட்டிருந்தேன்.
14
சோளம் அரைக்கும் ஆலை பண்ணையிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இருந்தது. இந்த வேலையை நான் எப்போதும் மிகவும் பயந்து தான் செய்வது வழக்கம். சோளம் நிறைந்த கனமான மூட்டை குதிரையின் முதுகின் மீது ஏற்றப்படும்; சோளம் இரு பக்கமும் சமமாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால், ஏறக்குறைய ஒவ்வொரு முறையும், பயணத்தின்போது சோளம் ஒரு பக்கமாக நகர்ந்து சமநிலையை குலைந்து விடுவதால் அது குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடும். சில சமயங்களில் நானும் அதனுடன் சேர்ந்து கீழே விழுந்துவிடுவேன். சோள மூட்டையை மீண்டும் குதிரையின் மீது ஏற்றும் அளவுக்கு எனக்கு உடல் வலிமை இல்லாததால், யாராவது அவ்வழியே வரும் வரை நான் காத்திருக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் பல மணிநேரம் காத்திருக்க நேரிடும். அந்த நீண்ட காத்திருப்பு நேரத்தை நான் பெரும்பாலும் அழுதுகொண்டே கழிப்பேன். இவ்வாறு நேரம் வீணானதால், ஆலைக்குச் செல்வதில் எனக்குத் தாமதம் ஏற்படும். சோளத்தை அரைத்துவிட்டு நான் வீடு திரும்பும்போது, ​​நள்ளிரவு நெருங்கியிருக்கும்.
15
அந்தப் பாதை மிக தனிமையானதும் பெரும்பாலும் அடர்ந்த காடுகளுக்கு ஊடாகத்தான் செல்லும். இதை கடந்து செல்வதில் எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கும். படையில் இருந்து தப்பி ஓடிய வீரர்கள் அந்தக் காடுகளில் நிறைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அப்படித் தப்பி ஓடியவர்கள், தனியாக இருக்கும் கறுப்பினச் சிறுவன் ஒருவனைக் கண்டால், முதலில் அவனது காதுகளை வெட்டிவிடுவார்கள் என்று என்னிடம் பல கதைகள் சொல்லப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, வீட்டிற்கு நேரம் கடந்து திரும்புவதால், கடுமையான திட்டுக்களையோ அல்லது அடி உதையையோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நினைவுகளும் பயமுறுத்திக்கொண்டே இருக்கும்.
16
நான் அடிமையாக இருந்த காலத்தில் எனக்கு எவ்விதப் பள்ளிக் கல்வியும் கிடைக்கவில்லை; இருப்பினும், என் இளம் எஜமானிகளில் ஒருத்தியின் புத்தகங்களைச் சுமந்து கொண்டு, அவளுடன் பள்ளிக்கூடத்தின் கதவு வரை சென்ற தருணங்கள் சில எனக்கு நினைவிருக்கின்றன. பள்ளிக்கூடம் ஒன்றில் பல சிறுவர் சிறுமியர்கள் அமர்ந்து கல்வி பயிலும் காட்சி என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது; அத்தகைய பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து கல்வி கற்பது என்பது, சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு இணையான ஒரு அனுபவமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
17
இதுவரை எனக்கு நினைவில் மீள் கொணரும் வரையில், நாங்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பதையும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நான் முதன்முதலில் அறிந்துகொண்டது, ஒரு நாள் அதிகாலையில், விடியலுக்கு முன்பே, என் தாய் தன் பிள்ளைகளின் மேல் மண்டியிட்டு, லிங்கனும் அவரது படைகளும் வெற்றி பெற வேண்டும் என்றும், ஒருநாள் அவளும் அவள் பிள்ளைகளும் விடுதலை அடைய வேண்டும் என்றும் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தபோதுதான். இந்த விஷயத்தில், தெற்கு முழுவதும் இருந்த அடிமைப்படுத்தப்பட்ட பாமர மக்கள், புத்தகங்கள் அல்லது செய்தித்தாள்களைப் பற்றி முற்றிலும் அறியாமல் இருந்தபோதிலும், இவர்களால் நாட்டை உலுக்கிக்கொண்டிருந்த மாபெரும் தேசியப் பிரச்சினைகளைப் பற்றி எப்படி இவ்வளவு துல்லியமாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்ள முடிந்தது என்பதை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.
18
கேரிசன், லவ்ஜாய் மற்றும் பிறர் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தெற்குப் பகுதி முழுவதிலும் இருந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், அந்த இயக்கத்தின் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்தனர். உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்களின்போதும், போரின்போதும் நான் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோதிலும், என் தாயும் பண்ணையில் இருந்த மற்ற அடிமைப்படுத்தப்பட்ட மக்களும் நள்ளிரவில் கிசுகிசுத்தபடி உரையாடிக்கொண்டதை என்னால் இன்றும் நினைவுகூர முடிகிறது. இத்தகைய உரையாடல்கள், அவர்கள் நிலவரத்தை நன்கு புரிந்துகொண்டிருந்ததையும், “திராட்சைக் கொடி” (grape-vine) செய்தித் தொடர்பு என்று அழைக்கப்பட்ட ஒரு மறைமுகத் தகவல் பரிமாற்ற முறையின் மூலம் நிகழ்வுகளைத் தொடர்ந்து அறிந்து வந்ததையும் காட்டின.
19
லிங்கன் முதன்முதலில் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நின்ற அந்தத் தேர்தல் பிரச்சாரக் காலத்தில், இரயில் பாதைகளோ, பெரிய நகரங்களோ அல்லது நாளிதழ்களோ இல்லாத, தொலைதூரத்திலிருந்த எங்கள் பண்ணையில் வாழ்ந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு, அந்தத் தேர்தலில் விவாதிக்கப்பட்ட சிக்கல்கள் என்னவென்று தெரிந்திருந்தது. வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே போர் தொடங்கியபோது, ​​எங்கள் பண்ணையில் இருந்த ஒவ்வொரு அடிமைக்கும் ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது: பல சிக்கல்கள் விவாதிக்கப்பட்டாலும், அடிமைமுறை என்பதே அந்தப் போரின் மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது என்று. தொலைதூரப் பண்ணைகளில் வாழ்ந்த, கல்வியறிவு அறவே இல்லாத என் இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட, தங்கள் இதயத்தில் ஒரு உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அதாவது, வடக்குப் பகுதி படைகள் வெற்றி பெற்றால், அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைதான் அந்தப் போரின் மிகப்பெரிய விளைவாக அமையும் என்பதில் அவர்களுக்குச் சிறிதும் ஐயம் இருக்கவில்லை.
20
ஃபெடரல் படைகளின் ஒவ்வொரு வெற்றியும், கூட்டமைப்பு (Confederate) படைகளின் ஒவ்வொரு தோல்வியும் மிகுந்த ஆர்வத்துடனும் தீவிர கவனத்துடனும் உற்றுநோக்கப்பட்டன. பெரும்பாலும், வெள்ளையர்களுக்குத் தெரிவதற்கு முன்பாகவே, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் முக்கியமான போர்களின் முடிவுகளை அறிந்துகொண்டனர். அஞ்சல் நிலையத்திற்குச் சென்று தபால்களை எடுத்து வரும் கலப்பினத்தைச் சேர்ந்த ஒரு நபர் மூலமாகவே இந்தச் செய்திகள் கிடைத்தன. அஞ்சல் நிலையம் பண்ணையிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இருந்தது; அங்கு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தபால் வரும். அஞ்சல் நிலையத்திற்குச் சென்ற அந்த நபர், அங்கிருந்த வெள்ளையர்கள் தங்கள் தபால்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, சமீபத்திய செய்திகளைப் பற்றி விவாதிக்கக் கூடும் இடத்திலேயே சிறிது நேரம் தங்கியிருப்பார். அவ்வாறு அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டு, செய்திகளின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வார். பின்னர், எங்கள் எஜமானரின் வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், தான் திரட்டிய அந்தச் செய்திகளை அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் பகிர்ந்துகொள்வார். இதன் விளைவாக, எஜமானரின் வீடு (big house) என்று அ
21
எனது குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமையின் முதற்பகுதியிலோ, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, இறைவனை வேண்டியபின், ஒரு நாகரிகமான முறையில் உணவருந்திய ஒரு நிகழ்வுகூட என் நினைவில் இல்லை. வர்ஜீனியாவில் இருந்த பண்ணையிலும், அதற்குப் பிந்தைய காலத்திலும், குழந்தைகள் உணவைப் பெற்றுக்கொண்ட விதம், ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவைப் பெற்றுக்கொள்வதைப் போலவே இருந்தது. எங்கோயோ ஏதோ ஒரு நேரம் ஒரு துண்டு ரொட்டி, வேறெங்கோயோ வேறொரு நேரம் ஒரு சிறு துண்டு இறைச்சி; ஒருமுறை ஒரு கோப்பை பால், மற்றொரு முறை சில உருளைக்கிழங்குகள் என இப்படித்தான் உணவு கிடைத்து கொண்டிருந்தது. சில சமயங்களில், குடும்பத்தில் சிலர் நேரடியாகச் சமையல் பாத்திரத்திலிருந்தே சாப்பிடுவார்கள்; மற்றவர்களோ தங்கள் மடியில் ஒரு தகட்டுத் தட்டை வைத்துக்கொண்டு, பெரும்பாலும் கைகளையே பயன்படுத்தி உணவை உண்பார்கள்.
22
நான் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு, உணவு வேளைகளில் “பெரிய வீட்டிற்கு”ச் சென்று, கப்பி அமைப்பின் மூலம் இயங்கும் பெரிய காகித விசிறிகளைக் கொண்டு மேசையைச் சுற்றியுள்ள ஈக்களை விரட்டும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. இயல்பாகவே, வெள்ளையர்களின் உரையாடல்களில் பெரும்பகுதி சுதந்திரம் மற்றும் போர் குறித்ததாகவே இருந்தன; அவற்றைக் கேட்டு நான் பல விஷயங்களைப் புரிந்துகொண்டேன். ஒருமுறை, என் இளம் எஜமானிகளில் இருவர் மற்றும் சில பெண் விருந்தினர்கள் முற்றத்தில் அமர்ந்து இஞ்சி கேக்குகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தது நினைவிருக்கிறது. அக்காலத்தில், நான் பார்த்தவற்றிலேயே மிகவும் கவர்ச்சிகரமான, விரும்பத்தக்க பொருளாக அந்தக் கேக்குகள் எனக்குத் தோன்றின. எனவே, என்றாவது ஒருநாள் எனக்குச் சுதந்திரம் கிடைத்தால், அந்தப் பெண்கள் சாப்பிட்டது போலவே நானும் இஞ்சி கேக்குகளை வாங்கிச் சாப்பிடும் நிலையை அடைவதே என் வாழ்வின் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும் என்று அப்போதே நான் தீர்மானித்துக்கொண்டேன்.
23
நிச்சயமாக, போர் நீடித்த காலங்களில், ​​வெள்ளையின மக்கள் பல சமயங்களில் தங்களுக்குத் தேவையான உணவைப் பெறுவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், வெள்ளையர்களை விட இந்தத் தட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைவாகவே உணர்ந்தனர் என்று நினைக்கிறேன்; ஏனெனில், அவர்களின் வழக்கமான உணவான சோள ரொட்டியும் பன்றி இறைச்சியும் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்படக்கூடியவை. ஆனால், வெள்ளையர்கள் பயன்படுத்தப் பழகியிருந்த காபி, தேநீர், சர்க்கரை போன்ற பொருட்களைப் பண்ணையில் விளைவிக்க முடியாது. போரினால் உருவான சூழல், இத்தகைய பொருட்களைப் பெறுவதை அடிக்கடி இயலாத காரியமாக்கியது. வெள்ளையர்கள் பல நேரங்களில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகினர். காபிக்குப் பதிலாக வறுத்த சோளத்தைப் பயன்படுத்தினர்; சர்க்கரைக்குப் பதிலாக ஒரு வகை கறுப்பு வெல்லப்பாகைப் (molasses) பயன்படுத்தினர். பல சமயங்களில், தேநீர் அல்லது காபி என்று அழைக்கப்பட்ட பானங்களை இனிப்பாக்க எந்தப் பொருளுமே கிடைக்கவில்லை.
24
நான் அணிந்ததாக நினைவில் இருக்கும் முதல் ஜோடி காலணிகள் மரத்தாலானவை. அவற்றின் மேற்பகுதி சொரசொரப்பான தோலால் ஆனது, ஆனால் சுமார் ஒரு அங்குல தடிமன் கொண்ட அடிப்பகுதி மரத்தால் செய்யப்பட்டிருந்தது. நான் நடக்கும்போது அவை பயங்கரமான சத்தத்தை எழுப்பின. அதுமட்டுமின்றி, பாதத்தின் இயல்பான அழுத்தத்திற்கு ஏற்ப அவை வளைந்து கொடுக்காததால், அவற்றை அணிவது மிகவும் அசௌகரியமாக இருந்தது. அவற்றை அணிந்திருக்கும்போது, ​​பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பூட்டும் ஒரு விசித்திரமான தோற்றத்தை உண்டாகியிருந்தது.
25
சிறுவனாக இருந்தபோது நான் அனுபவிக்க வேண்டிய மிகக் கடுமையான துன்புறுத்தல், சணல் இழையினால் ஆன சட்டையை கட்டாயமாக அணிய வேண்டியிருந்ததுதான். நான் வாழ்ந்த வர்ஜீனியாவின்பகுதியில், அடிமைகளின் உடைகளில் சணல் இழையைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. எங்கள் உடைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சணல் இழை, உண்மையில் கழிவுப் பகுதியாகும்; இதுவே மிகவும் மலிவானதும், சொரசொரப்பானதுமான பகுதியாகும். ஒரு புதிய சணல் சட்டையை முதன்முதலில் அணியும்போது ஏற்படும் வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை; ஒரு பல்லைப் பிடுங்கும் வலியைத் தவிர, வேறெந்த சித்திரவதையும் இதற்கு ஈடாகாது என்றுதான் சொல்ல வேண்டும். இது அணியும்போது, பல முட்கள் நிறைந்த காய் ஓடுகளோ (chestnut burrs) அல்லது நூற்றுக்கணக்கான ஊசி முனைகளோ உங்கள் தோலில் பட்டுக்கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தரும்.
26
இன்றும் கூட, இத்தகைய ஆடைகளில் ஒன்றை அணியும்போது நான் அனுபவித்த துன்பங்களை என்னால் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. என் உடல் மென்மையாகவும், நலிந்தும் இருந்ததால், அந்த வலி இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை; சணல் துணியால் ஆன அந்தச் சட்டையை அணிந்தே ஆக வேண்டும், இல்லையெனில் வேறு எந்த உடையும் அணிய முடியாது. என்னிடம் விருப்பம் கேட்கப்பட்டிருந்தால், நான் எந்த உடையையும் அணியாமல் இருக்கவே விரும்பியிருப்பேன். இத்தருணத்தில், என்னை விடச் சில ஆண்டுகள் மூத்த என் சகோதரன் ஜான், அடிமைப்பட்ட ஒருவன் மற்றொருவானுக்குச் செய்யும் மிகச் சிறந்த தியாகங்களில் ஒன்றைச் செய்தான். நான் புதிய சணல் சட்டையை அணிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான பல தருணங்களில், எனக்காக அந்தச் சட்டையைத் தானே அணிந்துகொண்டு, அது ஓரளவு மென்மையாகும் வரை சில நாட்களுக்கு அதை அவன் அணிந்துகொள்வான். நான் ஓரளவுக்கு வளர்ந்து இளைஞனாகும் வரை, இந்த ஒரே ஒரு ஆடையை மட்டுமே நான் அணிந்திருந்தேன்.
27
நான் கூறியவற்றிலிருந்து, வெள்ளையினத்தவர் மீது கறுப்பினத்தவர்களுக்குக் கடும் வெறுப்பு இருந்திருக்கலாம் என்று ஒருவர் நினைக்கக்கூடும். ஏனெனில், வெள்ளையினத்தவர்களில் பெரும்பாலோர் போருக்குச் சென்றிருந்தனர்; அந்தப் போரில் தெற்குப் பகுதி வெற்றி பெற்றிருந்தால், கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே இருந்திருப்பார்கள். ஆனால், நாங்கள் வாழ்ந்த தெற்குப் பகுதியின் கண்ணியத்துடன் நடத்தப்பட்ட இடங்களில் இருந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் இத்தகைய வெறுப்புணர்ச்சி இருக்கவில்லை.
28
உள்நாட்டுப் போரின்போது, ​​எனது இளம் எஜமானர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்; மற்ற இருவர் பலத்த காயமடைந்தனர். “மார்ஸ் பில்லி” (Mars’ Billy) என்ற வெள்ளை இனத்தவன் இறந்த செய்தியைக் கேட்டபோது, ​​அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவிய துயரத்தை என்னால் இன்றும் நினைவுகூர முடிகிறது. அது போலியான துயரம் அல்ல, உண்மையான துயரம். அடிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் “மார்ஸ் பில்லி”க்கு சிறுவயதில் பணிவிடை செய்திருந்தனர்; இன்னும் சிலர் அவனுடன் குழந்தைப் பருவத்தில் விளையாடியிருந்தனர். மேற்பார்வையாளரோ அல்லது எஜமானரோ மற்ற அடிமைகளைத் தாக்கும்போது, ​​அவர்களுக்காக “மார்ஸ் பில்லி” கருணை காட்டும்படி கெஞ்சியிருந்தான். அடிமைகளின் குடியிருப்பில் நிலவிய அந்தத் துயரம், “பெரிய வீட்டில்” (எஜமானரின் இல்லத்தில்) நிலவிய துயரத்திற்கு அடுத்தபடியாகவே இருந்தது. காயமடைந்த அந்த இரு இளம் எஜமானர்களும் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, ​​அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் அனுதாபத்தை பல வழிகளில் வெளிப்படுத்தியிருந்தனர்.
29
காயமடைந்த வெள்ளை படையினர்களை தங்கள் குடும்ப உறவினர்களைப் போலவே, அவர்களும் கவனிப்புப் பணிகளில் உதவ அடிமைகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அடிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர், இரவு நேரங்களில் விழித்திருந்து, காயமடைந்த தங்கள் எஜமானர்களைக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்பைத் தருமாறு கெஞ்சிக் கேட்பார்கள். அடிமை நிலையில் இருந்தவர்களின் இந்த மென்மையான உணர்வும் அனுதாபமும், அவர்களின் இயல்பிலேயே இருந்த கனிவான மற்றும் தாராளமான குணத்தின் வெளிப்பாடாகும். வெள்ளையின ஆண்கள் போருக்குச் சென்றபோது, ​​பண்ணைகளில் தனியாக விடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, அடிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்யத் துணிந்திருந்தனர். ஆண்கள் இல்லாத நேரத்தில், பண்ணையின் பெரிய இல்லத்தில் (“big house”) தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அடிமை, மிகுந்த கௌரவத்திற்குரியவராகக் கருதப்பட்டார். இரவு வேளையில் “இளம் எஜமானி” அல்லது “முது எஜமானி”க்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர், அந்த அடிமையின் பிணத்தைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். இது எத்தனை பேரின் கவனத்திற்கு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அடிமை ம
30
பொதுவாகச் சொல்லப்போனால், போருக்கு முன்னரும் போரின்போதும், எனது இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளையர்கள் மீது எந்தவிதமான கசப்புணர்வையும் கொண்டிருக்கவில்லை. போருக்குப் பிந்தைய சூழலில் வறுமையுற்று, மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட தங்கள் முன்னாள் எஜமானர்களையும் எஜமானிகளையும், கறுப்பின மக்கள் மிகுந்த கனிவோடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்ட பல நிகழ்வுகள் உள்ளன. அடிமைகளாக இருந்தவர்கள், தங்களை அடிமைப்படுத்தியிருந்த முன்னாள் எஜமானர்கள் துன்புறாமல் இருக்க, பல ஆண்டுகளாக அவர்களுக்குப் பண உதவி செய்து வந்ததை நான் அறிவேன். அதுமட்டுமின்றி, முன்னாள் அடிமைகளாக இருந்தவர்கள், தங்கள் முன்னாள் எஜமானர்களின் வாரிசுகள் கல்வி கற்பதற்கு உதவிய நிகழ்வுகளையும் நான் கண்டிருக்கிறேன்.
31
தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பண்ணையில் நடந்த ஒரு நிகழ்வு எனக்குத் தெரியும். அங்கு, அந்த நிலத்தின் “ஓல்ட் மார்ஸ் டாம்” (Old Mars’ Tom) என்ற முன்னாள் உரிமையாளரின் மகன் ஒருவன், மதுப்பழக்கத்தினால் தனது சுயக்கட்டுப்பாட்டையும் இழந்து பின் முழு சொத்துக்களையும் இழந்து, மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான். அந்தப் பண்ணையில் வாழும் கலப்பின மக்கள் தாங்களே வறுமையில் வாடினாலும், பல ஆண்டுகளாக அந்த வெள்ளையின இளைஞனுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்தனர். ஒருவர் அவனுக்குச் சிறிது காபியோ அல்லது சர்க்கரையோ கொடுக்கிறார், இன்னொருவர் சிறிது இறைச்சி தருகிறார். இப்படியே அவனுக்குத் தேவையானவை கிடைக்கின்றன. அவர்களின் முன்னாள் உரிமையாளரின் மகனுக்காக, அந்தப் பண்ணையில் வசிக்கும் கலப்பின மக்கள் தங்களுக்குச் சொந்தமான எதையும் கொடுக்கத் தயங்கியதில்லை. “ஓல்ட் மார்ஸ் டாம்” என்பவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்தவர்கள் அந்த இடத்தில் இருக்கும் வரை, அவரது மகன் ஒருபோதும் துன்பப்பட அனுமதிக்கமாட்டார்கள் போல் இருந்தது.
32
எனது இனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பைத் துரோகத்தனமாக மீறிய நிகழ்வுகள் மிகக் குறைவு என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இதற்குச் சிறந்த உதாரணங்களில் ஒன்று, ஓஹியோ மாகாணத்திலுள்ள ஒரு சிறிய நகரில் நான் சமீபத்தில் சந்தித்த, வர்ஜீனியாவைச் சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதையாகும். அடிமை ஒழிப்புப் பிரகடனம் (Emancipation Proclamation) வருவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அந்த அடிமை தனது உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார். அதன்படி, அவர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தனது உரிமையாளருக்குச் செலுத்துவதன் மூலம், தன்னைத்தானே மீள வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். மேலும், அந்தத் தொகையைச் செலுத்தும் காலக்கட்டத்தில், அவர் தனக்கு விருப்பமான இடத்தில், தனக்கு விருப்பமான நபருக்காக வேலை செய்துகொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
33
ஓஹியோவில் தனக்குச் சிறந்த ஊதியம் கிடைக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்து அங்கு அவர் சென்றுவிட்டார். அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, ​​அவர் தனது எஜமானருக்கு இன்னும் சுமார் முன்னூறு டாலர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அடிமை விடுதலைப் பிரகடனம் (Emancipation Proclamation) அவரைத் தனது எஜமானருக்குக் கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுவித்திருந்த போதிலும், அந்த கறுப்பின மனிதர் வர்ஜீனியாவில் இருந்த தனது முன்னாள் எஜமானரின் இருப்பிடத்திற்கு நீண்ட தூரம் நடந்து சென்திரு, அங்கு அவர், வட்டியுடன் சேர்த்து மீதமிருந்த முழுத் தொகையையும் தனது எஜமானரிடம் ஒப்படைத்திருந்தார். இதைப் பற்றி என்னிடம் விவரித்தபோது, ​​தான் இந்தக் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை என்பது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் தான் தனது எஜமானருக்குக் கொடுத்த வாக்கை ஒருபோதும் மீறியதில்லை என்றும் கூறினார். தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை, தனது சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது என்று அவர் கருதினார்.
34
நான் கூறிய சில விஷயங்களிலிருந்து, அடிமைப்படுத்தப்பட்ட மக்களில் சிலர் சுதந்திரத்தை விரும்பவில்லை என்று ஒருவர் நினைக்கக்கூடும். இது உண்மையல்ல. சுதந்திரமடைய விரும்பாத ஒருவரையாவது, அல்லது மீண்டும் அடிமைத்தனத்திற்குத் திரும்ப விரும்பும் ஒருவரையாவது நான் ஒருபோதும் கண்டதில்லை.
35
அடிமைத்தன வலையில் சிக்கிக்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான எந்தவொரு தேசத்திற்காகவும் அல்லது மக்கள் குழுவிற்காகவும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் பரிதாபப்படுகிறேன். என் இனத்தவர் அடிமைப்படுத்தப்பட்டதற்காக, தெற்குப் பகுதி வெள்ளையர்கள் மீது கொண்டிருந்த கசப்புணர்வை நான் எப்போதோ கைவிட்டுவிட்டேன். அடிமைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நம் நாட்டின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதியும் மட்டுமே முழுமையாகப் பொறுப்பல்ல; மேலும், மத்திய அரசாங்கமே பல ஆண்டுகளாக இதனை அங்கீகரித்து பாதுகாத்து வந்தது.
36
அடிமைமுறையின் பிடி குடியரசின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றிய பிறகு, அந்த அமைப்பிலிருந்து நாட்டை விடுவிப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. அதே சமயம், நாம் பாரபட்சத்தையோ அல்லது இன உணர்வையோ களைந்துவிட்டு, உண்மைகளை நேர்மையாக எதிர்கொண்டு பார்த்தால், ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்: அடிமைமுறை என்பது கொடூரமானதும் அறநெறிக்கு முரணானதுமான ஒன்றுதான். இருப்பினும், அமெரிக்காவில் வாழும் ஒரு கோடி கறுப்பின மக்கள்—அவர்களோ அல்லது அவர்களது முன்னோர்களோ அமெரிக்க அடிமைமுறை எனும் சூழலுக்கு உள்ளானவர்கள்—உலகத்தின் வேறெந்தப் பகுதியில் வாழும் அதே எண்ணிக்கையிலான கறுப்பின மக்களுடன் ஒப்பிடும்போது, ​​பொருள், அறிவு, அறம் மற்றும் மதம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் மிகவும் வலுவான, நம்பிக்கையூட்டும் நிலையில் தான் இருந்தனர்.
37
இது எந்த அளவிற்கென்றால், அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் கொடுமையை நேரில் அனுபவித்த கறுப்பின மக்களோ அல்லது அவர்களின் முன்னோர்களோ, இன்று ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிச் சென்று, அங்குள்ள தங்கள் தாயக மக்களுக்கு அறிவொளி புகட்டும் மத பணியாளர்களாகச் செயல்படுகின்றனர். அடிமைத்தனத்தை நியாயப்படுத்த நான் இதைக் கூறவில்லை; மாறாக, ஒரு சமூக அமைப்பாக நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனெனில், அமெரிக்காவில் அடிமைத்தனம் என்பது மதப் பணியின் நோக்கத்திற்காக அல்ல, மாறாக சுயநல மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே நிறுவப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டவும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற இறைவனின் பெயர் எவ்வாறு மனிதர்களையும் சமூக அமைப்புகளையும் கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டவுமே நான் இதைக் குறிப்பிடுகிறேன். மிகுந்த நம்பிக்கையற்ற சூழல்கள் நிலவும் இக்காலகட்டத்தில், இந்த நாட்டில் என் இனத்தின் எதிர்காலத்தின் மீது எனக்கு எப்படி இவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று யாராவது என்னிடம் கேட்டால், நாம் கடந்து வந்த அந்த இக்கட்டான பாதையையும், அதிலிருந்து நம்மை மீட்டு அழைத்து வந்
38
சுயமாகச் சிந்திக்கும் திறன் பெற்ற காலம் முதலே, எங்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிகள் ஒருபுறம் இருக்க, அடிமை முறையினால் கறுப்பின மக்களுக்குக் கிடைத்த அதே அளவிலான பாதிப்புகள் வெள்ளையர்களுக்கும் ஏற்பட்டன என்ற கருத்தை நான் கொண்டிருக்கிறேன். இந்த அடிமை முறையின் தீய விளைவுகள் கறுப்பின மக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கவில்லை. எங்கள் பண்ணையில் நிலவிய வாழ்க்கை முறையே இதற்குச் சிறந்த சான்றாகும். அடிமை முறையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும், உழைப்பை ஒரு இழிவான செயலாகவும், தாழ்வுநிலையின் அடையாளமாகவும் கருதும் சூழலை உருவாக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தது.
39
எனவே, அடிமைத்தனத்திலிருந்த இரு இனத்தவருமே அதிலிருந்து தப்பிக்கவே விரும்பினர். எங்கள் தோட்டத்தில் நிலவிய அடிமை முறை, வெள்ளையர்களிடமிருந்து சுயசார்பு மற்றும் சுயமாகச் செயல்படும் உணர்வை பெருமளவுக்கு நீக்கிவிட்டது. எனது பழைய எஜமானருக்குப் பல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் இருந்தனர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை, அவர்களில் எவரும் எந்தவொரு கைத்தொழிலையோ அல்லது உற்பத்தி சார்ந்த குறிப்பிட்ட துறையையோ கற்றுக்கொள்ளவில்லை. பெண்களுக்குச் சமைக்கவோ, தையல் வேலை செய்யவோ அல்லது வீட்டைப் பராமரிக்கவோ கற்றுக்கொடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. இயல்பாகவே, அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்தத் தோட்டத்தின் வாழ்வியலில் எந்தவிதமான தனிப்பட்ட ஆர்வமும் இருக்கவில்லை; மேலும், போதிய அறிவின்மை காரணமாக, அவர்கள் எந்தவொரு பணியையும் மிகச் சிறந்த மற்றும் முழுமையான முறையில் செய்யக் கற்றுக்கொள்ள முடியாமல் போனது.
40
இந்த அமைப்பின் விளைவாக, வேலிகள் பழுதடைந்தும், கதவுகள் கீல்களிலிருந்து கழன்று தொங்கிக்கொண்டும் இருந்தன; கதவுகள் திறக்கும்போது சத்தமிட்டன, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து போயிருந்தன, சுவர்களில் பூசப்பட்டிருந்த பூச்சு பெயர்ந்து விழுந்தும் அவை சரிசெய்யப்படாமல் இருந்தன, முற்றத்தில் களைகள் வளர்ந்திருந்தன. பொதுவாக, வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் போதுமான உணவு இருந்தது; ஆனால், வீட்டின் உட்புறத்திலோ அல்லது உணவு மேசையிலோ, ஒரு இல்லத்தை உலகின் மிக வசதியான, சௌகரியமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றக்கூடிய நுணுக்கமான நேர்த்தியோ, கச்சிதமான வேலைப்பாடோ காணப்படவில்லை. மேலும், உணவு மற்றும் பிற பொருட்கள் வீணடிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கக்கூடியதாக இருந்தது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்தபோது, ​​புத்தக அறிவு மற்றும் சொத்துரிமை ஆகியவற்றைத் தவிர, மற்ற விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் எஜமானர்களைப் போலவே புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குத் தயாரான நிலையிலேயே இருந்தனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்களோ, எஜமானரோ அல்லது அவரது மகன்களோ, எந்தவொரு குறிப்பிட்ட தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்கவில்
41
இறுதியாக, போர் முடிவுக்கு வந்தது; சுதந்திர நாள் உதயமானது. எங்கள் பண்ணையில் இருந்த அனைவருக்கும் அது ஒரு மிக முக்கியமான, நிகழ்வுகள் நிறைந்த நாளாக அமைந்தது. நாங்கள் இதற்காகத்தான் காத்திருந்தோம். பல மாதங்களாகவே சுதந்திரம் குறித்த உணர்வு எங்கும் பரவியிருந்தது. போர்க்களத்திலிருந்து தப்பி சென்ற வீரர்கள் அன்றாடம் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், அல்லது தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் எங்கள் இடத்திற்கு அருகிலேயே தொடர்ந்து கடந்து சென்றுகொண்டிருந்தனர். ‘வாய்மொழிச் செய்திப் பரிமாற்ற வலைப்பின்னல்’ (grape-vine telegraph) இரவு பகலாகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பெரும் மாற்றங்கள் குறித்த செய்திகளும் கிசுகிசுப்புகளும் ஒரு பண்ணையிலிருந்து மற்றொரு பண்ணைக்கு மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருந்தது.
42
“யாங்கி” (Yankee) படையின் படையெடுப்பு குறித்த அச்சத்தினால், பண்ணை இல்லத்திலிருந்த வெள்ளிப் பாத்திரங்களும் பிற மதிப்புமிக்க பொருட்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு, காட்டில் புதைத்து வைக்கப்பட்டன; அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்பகமான அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புதைத்து வைக்கப்பட்ட அந்தப் பொருட்களை யாராவது தொட முயன்றால், அவர்களுக்குக் கடும் விளைவுகள் காத்திருந்தன. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், யாங்கி வீரர்களுக்கு உணவு, பானங்கள், உடைகள் என எதைக் கொடுத்தாலும், தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பொருட்களை மட்டும் ஒருபோதும் கொடுக்கவில்லை. அந்த விடுதலை நாள் நெருங்க நெருங்க, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அந்தப் பாடல்கள் முன்பை விட உரமாகவும், கம்பீரமாகவும் இருந்தன; நள்ளிரவு வரை நீண்டன. பண்ணைப் பாடல்களில் இடம்பெற்ற பெரும்பாலான வரிகள் ‘விடுதலை’யைப் பற்றியே பேசின. உண்மையில், இதே வரிகளை அவர்கள் முன்பும் பாடியிருந்தனர்; ஆனால், அப்போது அந்தப் பாடல்களில் குறிப்பிடப்படும் ‘விடுதலை’ என்பது மறு உலகத்தைச் சா
43
அந்த முக்கியமான விடுதலை நாளுக்கு முந்தைய இரவு, மறுநாள் காலை எஜமானரின் இல்லத்தில் வழக்கத்திற்கு மாறான ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்ற செய்தி அடிமைகளின் இருப்பிடங்களுக்கு எட்டியது. அன்று இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை; அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தனர். மறுநாள் அதிகாலையில், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து அடிமைகளும் எஜமானரின் இல்லத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டனர். என் தாய், சகோதரர், சகோதரி மற்றும் பல அடிமைகளுடன் நானும் அந்த இல்லத்திற்குச் சென்றோம். எஜமானரின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் வராந்தாவில் நின்றோ அல்லது அமர்ந்தோ இருந்தனர்; அங்கிருந்து அவர்கள் செய்யப்போவதைக் காணவும், பேசப்போவதைக் கேட்கவும் கூடியதாக இருந்தது. அவர்களின் முகங்களில் ஆழ்ந்த எதிர்பார்புகளும் சோகமும் தெரிந்தது, ஆனால் கசப்புணர்வு ஏதும் இருக்கவில்லை.
44
அக்கால நிகழ்வுகளை இப்போது நினைவுகூரும்போது, ​​அவர்கள் தங்கள் மணித் அச்சொத்துக்களை இழந்ததற்காக வருத்தமடைந்ததாகத் தெரியவில்லை; மாறாக, தாங்களே வளர்த்தெடுத்த, பல வகைகளில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களைப் பிரிந்து செல்ல நேரிட்டதே அவர்களின் துயரத்திற்குக் காரணமாக இருந்தது. அந்தச் சூழலில் என் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு காட்சி என்னவென்றால், அந்நியர் போலத் தோன்றிய ஒருவர் (அநேகமாக அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரியாக இருக்கலாம்) ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்; அதன் பிறகு, நீண்ட ஆவணம் ஒன்றை வாசித்தார். அது 'விடுதலைப் பிரகடனம்' (Emancipation Proclamation) என்று நினைக்கிறேன். அந்த வாசிப்பு முடிந்ததும், நாங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் என்றும், விரும்பிய இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் எங்களிடம் கூறப்பட்டது. என் அருகில் நின்றிருந்த என் தாயார், தன் பிள்ளைகளை அணைத்து முத்தமிட்டார்; அப்போது அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இது குறித்து அவர் எங்களுக்கு விளக்கமளித்தார்: நீண்ட காலமாக அவர் பிரார்த்தனை செய்து வந்த நாள் இது என்றும், ஆனால் இந்த நாளைக் காணு
45
சில நிமிடங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியும், நன்றியுணர்வும், கட்டுக்கடங்காத பரவசமும் நிலவின. ஆனால், எவ்வித கசப்பு உணர்வும் இருக்கவில்லை. சொல்லப்போனால், அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட மக்களிடையே, தங்களை அடிமைகளாக வைத்திருந்த முன்னாள் எஜமானர்களைக் குறித்த பரிதாப உணர்வே இருந்தது. விடுதலை பெற்ற கலப்பின மக்களின் இந்த ஆரவாரமான மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை; அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியபோது, ​​அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கவனித்தேன். சுதந்திரமாக இருப்பதன் பெரும் பொறுப்பு, தங்களுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாக இருப்பது, தங்களுக்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சிந்தித்துத் திட்டமிட வேண்டிய கட்டாயம் — இவை அனைத்தும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கின. இது, பத்து அல்லது பன்னிரண்டு வயது சிறுவன் ஒருவனை, திடீரென்று உலகத்திற்குள் தள்ளி, அவன் தனக்கான தேவைகளைத் தானே கவனித்துக்கொள்ளச் சொல்வதைப் போன்றிருந்தது.
46
ஆங்கிலோ-சாக்சன் இனத்தவர் பல நூற்றாண்டுகளாக எதிர்கொண்டு வந்த பெரும் சிக்கல்கள், சில மணிநேரங்களிலேயே இந்த அடிமை மக்களின் முன்னால் தீர்வு காணப்பட வேண்டிய சவால்களாக வந்து நின்றன. அவை: இல்லறம், வாழ்வாதாரம், குழந்தைகளை வளர்த்தல், கல்வி, குடியுரிமை, மற்றும் தேவாலயங்களை நிறுவிப் பராமரித்தல் போன்ற விவகாரங்கள் ஆகும். எனவே, சில மணிநேரங்களிலேயே அந்த ஆரவாரமான கொண்டாட்டங்கள் அடங்கி, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஆழ்ந்த சோகம் கவிழ்ந்ததில் வியப்பு ஏதுமில்லை? சுதந்திரம் என்பது தங்களுக்குக் கிடைத்தவுடன், அது தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் தீவிரமான, பொறுப்புமிக்க ஒரு விஷயமாக அவர்களுக்குத் தோன்றியது.
47
அடிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் எழுபது அல்லது எண்பது வயதுடையவர்களாக இருந்தனர்; அவர்களின் வாழ்நாளின் சிறந்த காலம் கடந்துவிட்டிருந்தது. புதியதொரு இடத்தில், அறிமுகமில்லாத மனிதர்களுக்கு மத்தியில் பிழைப்பு நடத்துவதற்குத் தேவையான வலிமை அவர்களிடம் இருக்கவில்லை; ஒருவேளை அவர்கள் புதிய வசிப்பிடத்தைக் கண்டறிய முடிந்தாலும், அங்கு வாழ்வது அவர்களுக்குச் சாத்தியமற்றதாகவே இருந்தது. இத்தகைய முதியவர்களுக்கு, இந்தச் சூழல் மிகுந்த சவாலாக அமைந்தது. அதுமட்டுமின்றி, அவர்களின் ஆழ்மனதில் "எஜமானர்" (old Marster), "எஜமானி" (old Missus) மற்றும் அவர்களின் பிள்ளைகள் மீது ஒரு விசித்திரமான, ஆழமான பிணைப்பு இருந்தது; அந்த உறவை முறித்துக்கொள்வதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களுடன் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்திருந்த நிலையில், அவர்களைப் பிரிந்து செல்வது என்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. அந்த வயதான கறுப்பினத்தவர்கள், மெல்ல மெல்ல, ஒவ்வொருவராக, முதலில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தாங்கள் வாழ்ந்த குடியிருப்புகளிலிருந்து மீண்டும் "பெரிய வீட்டிற்கு" (எஜமானரின் இல்
48
★