தமிழில்
உதயன்
Subhashini.org
  
நீல நரி
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
257 reads • Apr 2025
ஆமையும் முயலும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
288 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
277 reads • Apr 2025
நரியும் ஆடும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
274 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
325 reads • Apr 2025
காக்கையும் நரியும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
394 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
277 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்
 in English   தமிழில்   മലയാളത്തിൽ   All
மூல எழுத்தாளர்: தெரியவில்லை
மீள எழுதியது: உதயன்
  முன்னொரு காலத்தில், ஒரு காட்டில், ஒரு ஆமையும் ஒரு முயலும் நண்பர்களாக இருந்தனர்.
1
ஆமையினால் மிக மெதுவாக மட்டுமே நகர முடியும். ஆனால் முயல் மிக வேகமாக நகரும். ஆமையின் இந்த மெதுவான வேகத்தை முயல் கேலி செய்வது வழக்கம்.
2
ஒரு நாள், காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் ஓரிடத்தில் கூடியிருந்தபோது, ​​முயல் ஆமையை கிண்டல் செய்ய விரும்பி, “நண்பா, நமக்குள் ஒரு ஓட்டப்பந்தயம் வைத்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டது.
3
முயல் தன்னை கேலி செய்வதற்காகத்தான் இதைக்கேட்பதை ஆமை உணர்ந்தாலும், “நிச்சயமாக நான் தயாராக இருக்கிறேன். ஒரு பந்தயம் நடத்துவோம்” என்றது.
4
இந்தப்பதில் முயலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆமை அதை நிராகரித்துவிடும் என்று நினைத்தது.
5
மற்ற விலங்குகளும் ஆச்சரியப்பட்டன. அவை ஆமையிடம், “நீ ஒருபோதும் முயலுடன் ஓடி வெற்றி பெற முடியாது. அதனால் போட்டியிடாதே!” என்றன.
6
ஆனால், ஆமை பின்வாங்கத்தயாராக இல்லை. பந்தயத்தில் ஓடுவதற்கு முடிவு செய்தது.
7
பந்தயத்தைத்தொடங்க மணி அடித்ததும், முயல் மிக வேகமாக ஓடத்தொடங்கியது.
8
ஆமை தன்னால் முடிந்தவரை வேகமாக ஊர்ந்து செல்லத்தொடங்கியது. முயல் பாதி தூரம் ஓடியபோது மிகவும் சோர்வை உணர்ந்தது.
9
முயல் ஒரு இடத்தில் ஓட்டத்தை நிறுத்தி திரும்பிப்பார்த்தபோது, ஆமை எங்கும் காணப்படவில்லை. பிறகு, ‘எப்படியும், ஆமை இங்கே வந்து சேர நீண்ட நேரம் ஆகும். நாம் சிறிது நேரம் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஓய்வெடுப்போம்.’ என்று நினைத்துவிட்டு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து தூங்கிவிட்டது.
10
இந்த நேரத்தில், ஊர்ந்து சென்று கொண்டிருந்த ஆமை, முயல் தூங்கிக்கொண்டிருப்பதைக்கண்டது. ஆனாலும், முயலைப்பொருட்படுத்தாமல், அது தனது இலக்கை நோக்கி தொடர்ந்தது.
11
சிறிது நேரம் கழித்து, முயல் விழித்தெழுந்து சுற்றிப்பார்த்தது. ஆமையை எங்கும் காணவில்லை. ஆமை இங்கு இன்னும் வந்து சேரவில்லை என்று நினைத்த முயல் மீண்டும் ஓடத்தொடங்கியது. முயல் தனது இலக்கை அடைந்தபோது அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்தது.
12
தான் இங்கு வந்து சேர்வதற்கு முன்பே ஆமை இங்கு வந்து சேர்ந்ததை பார்த்த முயல், வெட்கப்பட்டு தலை குனிந்தது.
13
ஆமை இப்பொழுது முயலிடம் சொன்னது: “யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் உள்ளன. நாம் அவற்றை அடையாளம் காண வேண்டும். உங்களுக்கு வேகமாக ஓடும் திறன் உள்ளது. அதேபோல், எனக்கு நிலத்திலும் நீரிலும் வாழும் திறன் உள்ளது.”
14
இதைக்கேட்டதும் முயல் தன் தவறை உணர்ந்து, ஆமையிடம் மன்னிப்பு கேட்டது.
15
பின்னர், அவர்கள் இருவரும் அந்தக்காட்டில் என்றென்றும் நல்ல நண்பர்களாக வாழ்ந்தனர்.
16
இந்தக்கதையின் அர்த்தம் என்னவென்றால், நாம் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
17

288 reads • Apr 2025 • 259 words • 17 rows


Write a Review